Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீவில்லிபுத்தூர் மினி பஸ் விபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இன்று காலையில் சுமார் 40 பயணிகளுடன் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையின் வளைவில் திரும்பியபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் நிதிஷ் குமார் (17), வாசுராஜ் (15), கல்லூரி மாணவர் சதீஷ்குமார் (20) மற்றும் தனியார் கல்லூரி ஊழியர் மாடசாமி (28) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

srivilliputhur accident student

மினி பஸ்ஸில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் குறுகலான சாலையில் அதிவேகமாகவும், அதிக பயணிகளுடன் சென்றதுமே விபத்துக்கு காரணம் என்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, மினி பஸ் ஓட்டுநர் நிதிஷ் என்பவரை மம்சாபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மம்சாபுரத்தில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையை சீரமைத்து அகலப்படுத்த வேண்டும் என்றும், மம்சாபுரத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி நகரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது..

"விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், தெய்வேந்திரி கிராமம், மம்சாபுரம் முதன்மைச் சாலையில், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இன்று (செப்டம்பர் 27) காலை 8 மணியளவில் சிற்றுந்து ஒன்று எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த மாடசாமி (29), வாசுராஜ் (16), நிதிஷ்குமார் (17) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் சதிஸ்குமார் (20) என்ற கல்லூரி மாணவர் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+