"தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்" 91 யானை பாகன்களுக்கு வீடு கட்ட ரூ 9.10 கோடி நிதி.. முதல்வரின் அறிவிப்பு
யானை பாகன்களுக்கு வீடு கட்ட வசதியாக 91 பாகன்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 9.10 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை: யானை பாகன்களுக்கு வீடு கட்ட வசதியாக 91 பாகன்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 9.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் முகாமில் பராமரிப்பாளர்களாக இருந்து வருபவர்கள் பொம்மன், பெள்ளி தம்பதி. இவர்கள் ரகு, அம்மு என்ற தாயை பிரிந்த குட்டி யானையை பராமரித்து வந்தனர்.
தங்கள் சொந்த குழந்தை போல் பராமரித்து வந்த நிலையில் அந்த யானையின் சுட்டித் தனத்தை கண்ட குறும்பட இயக்குநர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ், இவர்களை அணுகி ஆவணப்படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நடிக்கத் தெரியாது
இவர்களும் தங்களுக்கு நடிக்க தெரியாது என கூறிய நிலையில் நீங்கள் நடிக்க வேண்டாம், நாங்கள் வனத்துறையிடம் அனுமதி கேட்டு பெற்றுவிட்டோம். ஷூட்டிங் எடுக்க ஒத்துழைப்பு அளித்தால் போதும். மற்றபடி நீங்கள் அந்த யானையுடன் வழக்கம் போல் இருங்கள் என கூறினாராம். இதையடுத்து கடந்த இரு ஆண்டுகளாக ரகு யானையை இவர்கள் வளர்க்கும் விதத்தையும் அது இவர்களிடம் காட்டும் பாசத்தையும் தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படமாக இயக்கப்பட்டது.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நேற்று முன் தினம் 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதனால் பொம்மனும், பெள்ளியும் உலக அளவில் பிரபலமடைந்துவிட்டார்கள். அவர்களை போல் யானை ரகுவும் யார் அந்த ரகு என கேட்கும் அளவுக்கு மக்களின் நெஞ்சங்களில் வாண்டட் லிஸ்டில் வந்துவிட்டான்.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை
இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நேற்று முன் தினம் 95ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதனால் பொம்மனும், பெள்ளியும் உலக அளவில் பிரபலமடைந்துவிட்டார்கள். அவர்களை போல் யானை ரகுவும் யார் அந்த ரகு என கேட்கும் அளவுக்கு மக்களின் நெஞ்சங்களில் வாண்டட் லிஸ்டில் வந்துவிட்டான்.

விருது வழங்கும் விழா
இந்த நிலையில் விருது வழங்கும் விழாவின் போதே முதல்வர் ஸ்டாலின் முதுமலை தம்பதியையும் இயக்குநரையும் பாராட்டியிருந்தார். இந்த நிலையில் யானை பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர், பாராட்டு பத்திரமும் தலா ரூ 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

ஆவணப்படம்
இந்த ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ரூ 9.10 கோடி
மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்கள். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.

புதிய யானைகள் முகாம் 8 கோடி செலவு
கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் "அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்" ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications