ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றாதீர்கள்! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றாதீர்கள் என பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 51 நிர்வாகிகள் உள்பட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.
திமுகவில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், திமுகவில் சேர்வற்கு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்குக் கோபம் வருகிறது.

திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல. திமுக என்பது ஆட்சிக்கு வர வேண்டும். பதவியில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, மக்களுக்காக பணியாற்றி வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். பிற்பபடுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது.
இதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்தோம். 1949ஆம் ஆண்டு தொடங்கி, 1957 ஆம் ஆண்டுதான் தேர்தல் களத்திற்கே வந்தோம். ஆனால் இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். ஆனால் கட்சித் தொடங்கியதுமே ஆட்சிக்கு வர சிலர் துடிக்கிறார்கள். நேற்றுக் கட்சித் தொடங்கியவர்கள் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராவோம் என பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் யார், எந்த கட்சியின் தலைவர் என பெயர் சொல்ல விரும்பவில்லை. அதற்கு காரணம் நான் அவர்களுக்கு எல்லாம் அடையாளம் காட்ட விரும்பவில்லை. இதுதான் உண்மை. அவர்களின் பெயரை சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அந்த கட்சியோட பெயரையும் சொல்ல விரும்பவில்லை.
ஏழைகளுக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக, தமிழகத்திற்கு தொண்டாற்றத் தொடங்கியது திமுக. இங்கே இணைபவர்கள் தாங்கள் முன்பிருந்த கட்சியின் பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை. நீங்கள் (சீமான்) தரக்குறைவாக பேசப் பேசத்தான் உங்களை விட்டு விலகுகிறார்கள். அவரால் திமுக வளர்கிறது.
அது போல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு திமுகவை வளர்க்கிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். ஆவேசம் வரட்டும், கோபம் வட்டும். மதத்தை மையமாக ஆளுநர் பேசுவதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆளுநர் ரவியை தயவுசெய்து மாற்றி விட வேண்டாம். திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்கள் தொடர்ந்து பேசட்டும், மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள்.
என்றைக்காவது ஆளுநரை மாற்ற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாமோ? அவரை மாற்ற வேண்டாம். அடுத்த முறையும் அவர் ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேற வேண்டும். அதை நாம் பார்க்க வேண்டும்.
எனவே இப்போது நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கோரிக்கை வைக்கிறேன், ஆளுநரை மாற்ற வேண்டாம். என கேட்டுக் கொண்டார்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications