தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 5வது மண்டலம் மற்றும் 6வது மண்டலமான ராயபுரம் மற்றும் திரு.வி.க திடக்கழிவுக் தூய்மைப் பணிகளுக்காக தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இதற்கு, தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

CM Stalin Assures Dravidian Model Govt Will Uphold Dignity of Sanitation Workers

இந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 13 நாட்களாக நீடித்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி மேயர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் தூய்மை பணியாளர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் பேச்சுவார்த்தை எடப்படாத நிலையில், போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே, இந்தப் போராட்டம் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நடப்பதாகவும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்த நிலையில், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 600க்கும் அதிகமான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். கைதாக மறுத்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி பேருந்தில் ஏற்றினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான புதிய திட்டங்களை பட்டியலிட்டு, தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த நிலையில், நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,

🍛 தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
🎓 தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
💰 தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
🏥 தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
🏚 தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
🫂 பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
🩺 தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்
முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம்!
இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு!" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+