துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்தி தமிழக அரசின் மருத்துவம் சுகாதார சேவை இயக்குனராக நியமனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு துறைகளுக்கான இயக்குனர்கள், செயலாளர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் (டி.எம்.எஸ் பிரிவு) இயக்குநராக டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆவார் இவர்.

m k stalin dmk

இதற்கு முன்பே தமிழக அரசு மருத்துவமனைகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை இவர் வகித்து இருக்கிறார். அரசு மருத்துவமனை தொடர்பாக முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் தற்போது மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் பதவியை பெற்றுள்ளார்.

மருத்துவம், சுகாதாரம் ரீதியாக இவர் ஆற்றிய பணிகள், இவர் மேற்கொண்ட சில வழக்குகள் பெரிய அளவில் கவனம் பெற்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது.

பல நிர்வாகிகள் மாற்றம்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 2 டாப் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் டாப் செயலாளர்களாக இருக்கும் 2 பேர் டெல்லி செல்ல அழைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இரண்டு பேருமே தற்போது தமிழ்நாட்டில் மிக பெரிய செயலாளர் பதவிகளில் இருக்கின்றனர். முக்கியமான சில துறைகளே அவர்களுக்கு கீழ்தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் டாப் சாய்ஸ் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இரண்டு பேருமே தற்போது டெல்லிக்கு மத்திய பணிக்கு செல்ல இருக்கின்றனர். தமிழக அரசு இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சக முடிவை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.

இந்த நிலையில்தான் அவர்கள் மாற்றப்படுவதோடு சேர்ந்து பல அதிகாரிகள் மாநில அளவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி பல செயலாளர்கள் முக்கிய பொறுப்பில் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக தலைமை செயலகத்தில் முக்கியமான சில துறைகளை கவனிக்கும் செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

நிர்வாக மாற்றம்: முக்கியமாக கள்ளக்குறிச்சி விவாகரத்திற்கு பின் அதிகாரிகள் மாற்றம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது

இந்த விவகாரத்தில் மொத்தமாக 62 பேர் பலியாகி உள்ளனர். அதோடு மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் நிர்வாகத்தை மாற்றும் பொருட்டு பல்வேறு துறைகளுக்கான இயக்குனர்கள், செயலாளர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+