திருமாவிடம் அந்த கேள்வியை.. தனியாக போன் போட்டு கேட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? இவ்வளவு நடக்குதா?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்ததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியிருக்கும் ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை நினைத்த நேரத்தில் ஒருங்கிணைத்து கலந்துரையாட இனி நேரம் கிடைக்காது என்பதால், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அறிவாலயத்திற்கு அழைத்து நேற்று தேநீர் விருந்து கொடுத்தார். இந்த தேநீர் விருந்து தேர்தலை வெற்றிக்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டமாகவும் மாறியிருந்தது.

ஸ்டாலின் ஆலோசனை
ஒரு ரவுண்ட் டேபிளில் ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, திருமா, செல்வப்பெருந் தகை, சண்முகம், வீரபாண்டியன், கமல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அப்போது, வெற்றிக் கூட்டணியை அமைத்திருப்பது பற்றியும், நீங்கள் எல்லோரும் ஒத்துழைத்த தால் தான் ஒரு மாபெரும் கூட்டணியை அமைக்க முடிந்தது என்பதையும், வெல்வோம் 200 என்கிற இலக்கை நாம் தொட்டுவிட முடியும் என்றும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
கூட்டணிக்கான வெற்றி எப்படி இருக்கும் என்பதை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பாணியில் விவரித்திருக்கிறார்கள். அதனைக்கேட்டதும், மிக நம்பிக்கையாக நமது தேர்தல் பயணம் தொடங்குகிறது. நாளைக்கு பிரச்சாரத்தைத் துவக்குகிறேன்.
பிரச்சாரத்தை தொடங்குகிறேன்
வாக்குப்பதிவுக்கு குறைந்த நாட்கள் தான் இருக்கிறது. முடிந்த அளவுக்கு எல்லா தொகுதிகளுக்கும் உங்கள் பிரச்சாரம் இருக்கும்படி உங்கள் பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டாராம் ஸ்டாலின்.
இந்த சந்திப்பு குறித்து கூட்டணி கட்சியினர் சிலரிடம் விசாரித்தபோது, ''கூட்டணிக் கட்சித் தலைவர்களை மதிப்பதிலும் அவர்களிடம் மனம் விட்டு பேசுவதிலும் ஸ்டாலினை மிஞ்ச யாரும் கிடையாது. அவருடைய அணுகுமுறை எப்போதும் மென்மையாக இருக்கும். அவரிடம் பேசுவதே நமக்கு ஒரு தெம்பைக் கொடுக்கும்.
' என்று குறிப்பிட்டனர்.
திருமாவளவனிடம் அந்த கேள்வி
இந்த தேநீர் விருந்து ஆலோசானையில், திருமாவளவனிடம் அந்த கேள்வியை ஸ்டாலின் கேட்பார் என எதிர்பார்த்தோம். திருமாவும் கூட எதிர்பார்த்திருந்தார். அதாவது, எம்.பி.யாக இருக்கும் நீங்கள் திடீரென்று சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறீர்களே, என்னாச்சு? என கேட்பார் என்று எதிர்பார்த்தோம்.
டெல்லி அரசியலில் இருந்து விசிக எம்பி திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்பி உள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்று நேற்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவரின் விளக்கம் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தொல். திருமாவளவன் அளித்த விளக்கத்தில், "மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இதனால்தான் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்றுள்ளார்.
இதையடுத்து தமிழக அரசியல் களம் இப்போது 'காட்டுமன்னார்கோவில்' பக்கமாகத் திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் என் குரல் ஒலிக்க வேண்டும்" என விசிக தலைவர் தொல். திருமாவளவன் எடுத்திருக்கும் முடிவு, வெறும் தொகுதி மாற்றம் மட்டுமல்ல; அது 2026-க்குப் பிந்தைய தமிழக அரசியலுக்கான ஒரு மெகா 'ஸ்கெட்ச்' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
திருமா முடிவிற்கு என்ன காரணம்?
திடீரென இந்த முடிவை திருமா எடுத்திருந்ததால் அது குறித்து சில சந்தேகங்கள் பொது வெளியில் பரபரப்பானது. அதனால் அப்படி ஒரு கேள்வியை ஸ்டாலின் கேட்பார் என எதிர்பார்த் தோம். ஆனால், அது குறித்து எந்த கேள்வியையும் அவர் திருமாவிடம் கேட்கவில்லை. விருந்து முடிந்தப் பிறகு விசாரித்தபோதுதான், அது குறித்து ஸ்டாலினிடம் ஃபோனிலேயே விளக்கம் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது.
அதனால் தான் தேநீர் விருந்தில் அது பற்றிய கேள்வி எதையும் கேட்கவில்லை. அதேபோல, காங்கிரசில் இன்னும் வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகாததால், செல்வப்பெருந்தகையிடம் மட்டும், கேண்டிடேட்ஸ் லிஸ்ட்டை எப்போது ரிலீஸ் செய்ய போறீங்க? வழக்கம் போலத்தானா ? என்று நகைச்சுவையாக ஸ்டாலின் கேட்டார். அதற்கு, மேலிடத்தில் லிஸ்ட் கொடுத்தாச்சு. நாளைக்கு ரிலீஸ் செய்திடுவாங்க என சொல்லியிருக்கிறார் செல்வபெருந்தகை. இதைத்தாண்டி, உடல் நலம் குறித்து ஒவ்வொரு தலைவர்களும் விசாரித்துக் கொண்டார்கள்'' என்று தெரிவித்தனர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications