Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் மெகா "நேஷனல் பிளான்".. பிரதமர் வேட்பாளர்?.. காங். புள்ளியே கிரீன் சிக்னல்.. காட்சி மாறுதே

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவாரோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிடும் திட்டத்தில் திமுக இருப்பதாக திமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சமீபத்தில் சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அவர் தன்னுடைய தேசிய அளவிலான திட்டம் குறித்து பேசினார். இந்த நிகழ்விற்கு பின்பில் இருந்து ஸ்டாலினை பிரதமர் வேட்பாளர் ஆக்க வேண்டும் என்பது தொடர்பான குரல்கள் அதிகம் கேட்க தொடங்கி உள்ளன.

இந்த நிகழ்விற்கு முன் பேசிய பரூக் அப்துல்லா.. முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார். பாஜகவை கட்டுப்படுத்த அவரை போன்ற ஒருவர் தேசிய அரசியலுக்கு தேவை.

ஸ்டாலின்

ஸ்டாலின்

தேசிய அரசியலில் அவர் இருந்தால் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா பேசி இருந்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்.. தான் ஏற்கனவே தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், தேசிய அரசியலில்தான் தான் இருப்பதாகவும் பேசி இருந்தார். மேலும் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும்.

பிரதமர்

பிரதமர்

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.இந்த விழாவில் ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூட பரூக் அப்துல்லா கூறி இருந்தார். இதை தொடர்ந்தே ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ஆக வேண்டும் என்ற குரல்கள் கேட்க தொடங்கி உள்ளன.

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஆனால் இதை கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வி இருந்தது. முக்கியமாக காங்கிரஸ்தான் கூட்டணியின் தலைமை என்பதால் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில்தான் இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், வட கிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை வைத்து பாஜக வலுவாக உள்ளது என்று முடிவு செய்ய முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அணிகளை அமைக்க வேண்டும். அதன்பின்பே தேர்தலை பற்றி கணிக்க முடியும். இப்போதே எதுவும் கணிக்க முடியாது. தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வென்றுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு இந்த தேர்தல் பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் பெரிய பூஸ்ட்டாக இருக்கும்.

பூஸ்ட்

பூஸ்ட்

பாஜகவிற்கு எதிராக பெரிய கூட்டணி அமைய வேண்டும். இதற்கு காங்கிரஸ் அச்சாரமாக இருக்கும். முதல்வர் ஸ்டாலின் பிரதமர் ஆக ஆசைப்படுவதில்லை தவறு இல்லை. ஏற்கனவே மாநில முதல்வர்கள் பிரதமர்கள் ஆகி உள்ளனர். அதேபோல் இப்போது முதல்வர் ஸ்டாலின் அப்படி நினைப்பதில் தவறு இல்லை, என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்பி ஒருவரே இப்படி கூறி உள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 2024ல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. காங்கிரசை பல்வேறு கட்சிகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. உதாரணமாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் போன்றவை காங்கிரசை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது இந்த கட்சிகளுக்கு நட்பாக இருக்கும் ஒருவர்தான் பிரதமர் ஆக முடியும். அதாவது தொங்கு நாடாளுமன்றம் உருவானால், எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆட்சி அமைக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒருவர் பிரதமராக வேண்டும். ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் உருவாகி, காங்கிரஸ் தலைமை மற்ற கட்சிகள் ஏற்கவில்லை என்றால் அப்போது ஸ்டாலினை பிரதமராக்கலாம் என்ற திட்டம் திமுகவிடம் உள்ளதோ என்ற எழுந்துள்ளது. இதை மனதில் வைத்தே திமுக காய்களை நகர்த்தி வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+