நிதி ஆயோக்கில் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? நாங்கள் எதிரிகளா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: ஒரு மாநில முதல்வரான மம்தா பானர்ஜியை, நிதி ஆயோக் கூட்டத்தில் இப்படித்தான் நடத்துவதா என மத்திய பாஜக அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் தான் 5 நிமிடங்கள் பேசியதும் மைக் அணைக்கப்பட்டதால் அங்கிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாதியில் வெளியேறிய நிலையில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுதான் கூட்டாட்சி தத்துவமா? மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கி அவர்களை எதிரிகளை போல் நடத்தக் கூடாது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைவரது கருத்துகளுக்கும் உரையாடல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளிலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என கூறி அந்த கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என கூறி தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும் டெல்லி, புதுவை ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும் இன்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையிலும் சில மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அவர் நிதி ஆயோக் கூட்டம் முடிவதற்கு முன்பாக பாதியிலேயே வெளியேறிவிட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியது. இதனால் நான் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்துவிட்டேன்.
பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் மற்றும் பாஜக கூட்டணியினர் ஆளும் மாநில முதல்வர்களும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள். சந்திரபாபு நாயுடு 20 நிமிடங்களை வரை பேசினார், அது போல் அஸ்ஸாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேசினர். அவர்களுக்கு வாய்ப்பளித்த மத்திய அரசு எனக்கு தரவே இல்லை.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்களில் நான் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். ஆனாலும் எனக்கு பாரபட்சம் காட்டப்பட்டது. வெறும் 5 நிமிடங்கள் மட்டும் எனக்கு பேச வாய்ப்பளித்தனர். 5 நிமிடங்களுக்கு மேல் பேசிய போது என் இருக்கை அருகே இருந்த மைக்கை ஆஃப் செய்துவிட்டனர்.
பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணியில் உள்ள முதல்வர்களுக்கு மட்டும் அதிக வாய்ப்புகளை வழங்கிவிட்டு என்னை புறக்கணித்திருக்க கூடாது. இது மேற்கு வங்க மாநிலம் மட்டுமின்றி அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும். இது நியாயமற்றது என்றேன். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications