பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.
இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Lokniti CSDS என்ற ஆய்வு அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 62 சதவீதம் பேர் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 12 சதவீதம் பேர் மட்டுமே வேலை கிடைப்பது எளிது என கூறியுள்ளனர்.
முஸ்லீம் சமூகத்தில் 67 சதவீதம் பேர் வேலை வாய்ப்பு பெறுவது கடினம் என கூறிய நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 63 சதவீத இந்துக்களும் பழங்குடியினர்களில் 59 சதவீதம் பேரும் அதையே சொல்லியுள்ளனர். வெறும் 17 சதவீதம் பேர் மட்டுமே வேலை எளிதாக கிடைக்கிறது என கூறியுள்ளனர்.
76 சதவீதம் பேர் பணவீக்கம் தங்களை கடுமையாக பாதித்ததாகவும் தெரிவித்துள்ளனர். அது போல் 71 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த கருத்து கணிப்பை இந்த அமைப்பானது 19 மாநிலங்களில் 10,019 பேரிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.
55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஊழலுக்காக 25 சதவீதம் பேர் மத்திய அரசையும், 16 சதவீதம் பேர் மாநில அரசையும் குறை கூறுகிறார்கள். வாங்கும் ஊதியத்தில் 36 சதவீதம் பேர் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாகவும் ஆனால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications