பிரதமர் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது.. தமிழர்கள் எப்படி நம்புவாங்க.. ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: பிரதமர் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, அப்படியிருக்கும் போது தமிழர்கள் எப்படி நம்புவார்கள் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்த போது தமிழகம் வந்த பிரதமர் மோடி, தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்கள், தமிழகத்திற்கு வந்து சேரும் விமானங்கள் அனைத்திலும் அறிவிப்புகளை தமிழ் மொழியில் செய்வதற்காக முடிவு எடுத்துள்ளதாக கூறிய வீடியோவை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று மாலைச் செய்தி:
தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!
நேற்று காலைச் செய்தி:
அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?
கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?
ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?
பிரதமர் மோடி அவர்களே...
கருப்புப் பணம் மீட்பு,
மீனவர்கள் பாதுகாப்பு,
2 கோடி வேலைவாய்ப்பு,
ஊழல் ஒழிப்பு போல்
காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,
அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.
"எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!
தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
நேற்று மாலைச் செய்தி:
— M.K.Stalin (@mkstalin) March 30, 2024
தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!
நேற்று காலைச் செய்தி:
அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?
கெட்டிக்காரன் புளுகாவது… pic.twitter.com/iHbDlYQKio
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதாவது: முதல்வரான என்னிடமே பொய் சொன்னவர் பிரதமர் மோடி, பொய்களை மட்டுமே பரிசாகத் தரும் பிரதமருக்கு ஏமாற்றத்தை பரிசாகத் தர தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகிவிட்டது.
மழை, வெள்ளம் ஏற்பட்ட போது கனிமொழியே தண்ணீரில் இறங்கி மக்களுடன் மக்களாக நின்று நிவாரண பணிகளில் ஈடுபட்டதை நீங்களே பார்த்தீர்கள். இதை கூறினால் பிரதமர் மோடி, திமுகவின் குடும்ப அரசியல் என பழைய பல்லவியை பாடுவார். மோடி அவர்களே நாங்கள் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளோம், எப்படி மக்கள் பணியாற்ற வேண்டுமென தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications