44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழகத்தில் கொண்டு வந்தது எப்படி?.. விளக்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் நடைபெறுவது ஏன் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
Recommended Video
சென்னை அருகே மாமல்லபுரத்தில் பூஞ்சேரியில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்,மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன், தமிழக அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் இந்த நேரு ஸ்டேடியத்தில் இது போன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நடைபெறுவது சர்வதேச அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. குஜராத் முதல்வராக இருந்த போது செஸ் விளையாட்டுப் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி.

ஒலிம்பியாட்
44வது செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டில் நடப்பதற்கு தமிழக அமைச்சர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டனர். கடின உழைப்பு காரணமாக தமிழகத்திற்கு இத்தகைய பெருமை கிடைத்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது.

கொரோனா
ஆனால் அங்கு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அந்த போட்டி அங்கு நடத்த இயலாத நிலை இருந்தது. அப்போதுதான் இந்த போட்டியை இந்தியாவில் நடத்தலாமா என ஆலோசனைகள் நடத்தப்பட்டன. உடனே நான் அதிகாரிகளை அழைத்து ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடப்பதானால் நம் தமிழகத்தில்தான் நடக்க வேண்டும். அதை கேட்டு பெறுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

சர்வதேச போட்டி
அதன்படி தமிழகத்தில் நடைபெறுவதாக கடந்த மார்ச் மாதம் நான் அறிவித்தேன். பொதுவாக இது போன்ற சர்வதேச போட்டிகளை நடத்த குறைந்தது18 மாதங்களாவது ஏற்பாடுகளை செய்ய நேரம் எடுக்கும். ஆனால் தமிழகத்தில் நான்கே மாதங்களில் இந்த போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் மெய்யநாதன், அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications