கடைசி கட்டத்தில் மாற கூடாது! உன்னிப்பாக கவனித்த திமுக! தொகுதிக்கு தொகுதி இறக்கப்பட்ட டீம்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கடைசி கட்டத்தில் எதுவும் மாற கூடாது என்பதற்காக திமுக கண்கொத்தி பாம்பாக கள நிலவரங்களை கவனித்து வருகிறதாம்.

தேர்தல் நெருங்க நெருங்க திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு வருகிற புகார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறதாம். அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதில் ஒவ்வொரு இரவும் அவருக்கு நீண்ட இரவாக இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர்.

CM Stalin focused keenly on last two days of campaign for DMK Lok Sabha election 2024

இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் வேறு, தேர்தல் சமயத்தில் எதை பேசவேண்டும் . எதை பேசக்கூடாது என்று தெரியாமல், காமெடியாக பேசுகிறோம் என்கிற பாணியில் எதையாவது உளறி வைத்துவிடுகிறார்கள். அது நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அப்படிப்பட்ட விவகாரங்களையும் கவனிப்பதில் ஸ்டாலினுக்கு தாவு தீர்ந்து விடுகிறதாம்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடை வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.

சொந்த கட்சி விஷயங்கள் மட்டுமின்றி மாற்று கட்சி விஷயங்களும் உடனுக்குடன் ஸ்டாலின் தரப்பிற்கு செல்கிறதாம்.

கடைசி கட்டம்: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கடைசி கட்டத்தில் எதுவும் மாற கூடாது என்பதற்காக திமுக கண்கொத்தி பாம்பாக கள நிலவரங்களை கவனித்து வருகிறதாம். தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இன்றும் நாளையும் மட்டுமே தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியும். இதனால் கடைசி கட்ட பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

திமுக பிரச்சாரம்: திமுக சார்பாக தமிழ்நாடு முழுக்க மிக தீவிரமாக இறுதிக்கட்ட பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளாராம்.

கடைசி கட்ட தேர்தலில் பிரச்சனைகள் எதுவும் வர கூடாது. பாஜக அதிமுக காசு கொடுக்க பார்க்கும். முக்கியமாக பாஜக காசு கொடுக்க பார்க்கும். தங்க நகை கூட கொடுக்கலாம். இதை தொகுதிக்கு தொகுதி உன்னிப்பாக கவனியுங்கள். உங்களுக்கு வரும் தகவல்களை உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புங்கள்.

சமுக வலைத்தளங்களில் போடுங்கள். கொங்கு மண்டலத்தில் இப்படி செய்ய அதிகம் வாய்ப்புகள் உள்ளன. விட வேண்டாம். கடைசி கட்டத்தில் எதுவும் கையை விட்டு போக கூடாது. நமக்குத்தான் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது. அதனால் களத்தில் கடைசி வரை இருங்கள் என்று உத்தரவிட்டுள்ளாராம். இதையடுத்து களநிலவரங்களை கவனிக்க திமுக சார்பாக சிறப்பு டீம்கள் இறக்கப்பட்டு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+