தலைமைச் செயலாளர் முதல் தமிழக காவல் துறை டிஜிபி வரை..சூப்பர் டீமை ஃபார்ம் செய்த ஸ்டாலின்!
சென்னை: தலைமைச் செயலாளர் முதல் தமிழக காவல் துறை டிஜிபி வரை திறமையானவர்களை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
Recommended Video
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த நாள் முதல் நிர்வாக ரீதியாக பல்வேறு துறைகளில் மாற்றங்களை செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதில் அவர் செய்த முதல் மாற்றம், அவருக்கான தனிச் செயலாளர்களில் உதயசந்திரன், அனு ஜார்ஜ், சண்முகம், கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்தார்.
இதற்கு அடுத்து தலைமை செயலாளர் பதவிக்கு மிகவும் பொருத்தமான வெ. இறையன்புவை நியமித்தார். இதற்கு அடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை இடமாற்றம் செய்து அவருக்கு பதில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்ஸை கொண்டு வந்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள்
பொதுவாக அரசை இயக்குவது ஐஏஎஸ் அதிகாரிகளும்தான். அந்த டீம் நன்றாக இருந்தால்தான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி எட்டும். அரசுக்கும் நற்பெயர் கிடைக்கும். எப்போதும் திறமையானவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை கருணாநிதியும், ஜெயலலிதாவும் அவ்வப்போது செய்வார்கள்.

லஞ்ச ஒழிப்பு
அதே பாணியை ஸ்டாலினும் கையிலெடுத்துள்ளார். அரசு சரியாக இயங்க லஞ்ச லாவண்யம் இல்லாமல் இருத்தல் வேண்டும். அந்த வகையில் தற்போதைய ஒன்றிய அமைச்சராக இருக்கும் அமித்ஷாவையே பல ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தவர் கந்தசாமி. அவரை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரியாக்கினார் ஸ்டாலின்.

ஆலோசனை
அடுத்த அதிரடியாக தமிழகத்தின் பொருளாதார ஆலோசனை குழு அமைத்தது. பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தவர்களான ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோரை கொண்டு பொருளாதார ஆலோசனை வழங்க ஒரு குழுவை நியமித்தார். இந்த குழுவில் இவர்கள் மட்டுமல்லாது நாராயணன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃபலோ, ஜான் டிரீஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு டிஜிபி
அடுத்தது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி. எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் அது அமைதி பூங்காவாக திகழ்வது சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் கையில் இருக்கிறது. அந்த வகையில் சைலேந்திர பாபுவை தேர்வு செய்துள்ளார். இப்படியாக தலைமைச் செயலாளர் முதல் தமிழக டிஜிபி வரை ஸ்டாலின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாகவே இருக்கிறது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications