Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறி வைக்கப்பட்ட ஜெகத்ரட்சகன்.. முன்னாடியும் இப்படித்தான்! யு.எஸ்ஸில் உள்ள ஸ்டாலினுக்கு.. போன மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.18 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ரூ.908 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது. வெளிநாடு சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இது தொடர்பான தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

jagathrakshakan enforcement department

இதனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில்.. இங்கே ஆட்சி அதிகாரத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது.

ஆனாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. தலைமை செயலாளர் முருகானந்தம் தினசரி பணிகளை கவனிப்பார் . நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார்.. இந்த பணிகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றம்: தமிழ்நாட்டில் அதிகாரிகள் மாற்றம் சில நாட்களுக்கு இனி இருக்காது.. என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்ததாக.. தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒரு வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். இதற்கான லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த மாற்றம்தான் செய்யப்படவில்லை.

ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பின் மாற்றங்கள் செய்யப்படும் என்கிறார்கள். இப்படி இருக்க ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இங்கே நடக்கும் எல்லா விஷயங்களும் தகவல்களாக கொடுக்கப்பட்டு வருகின்றன.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன்: அந்த வகையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.18 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ரூ.908 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது. வெளிநாடு சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இது தொடர்பான தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக திமுக MP ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதை கணக்கில் வைத்தே ₹89.18 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன மற்றும் ₹908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி ஒப்புதலை பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியது தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் வெளிநாடு: முன்னதாக ஸ்டாலின் வெளிநாடு சென்ற போதே அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போதுதான் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார். அதேபோல் ஸ்டாலின் வெளிநாட்டில் உள்ள நிலையில் திமுக எம்பி மீது ஆக்சன் எடுக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+