இவ்வளவு உயரம் ஆகாது.. மதிவதனி டைமிங்கில் சொன்னதும்.. ஸ்டாலின் தந்த ரியாக்ஷன்.. ஸ்டன் ஆன ஆ ராசா
சென்னை: நேற்று நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் பேச்சாளர் மதிவதனி பேசிய போது முதல்வர் ஸ்டாலின் தந்த ரியாக்சன் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், நம் இளைஞரணி முன்னெடுப்பில், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் #என்_உயிரினும்_மேலான கலைஞர் நூற்றாண்டு பிரமாண்ட பேச்சுப் போட்டி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, ஆற்றல்மிக்க பேச்சாளர்களைக் கழகத்துக்குத் தேர்ந்தெடுத்துத் தர வேண்டும்’ என்ற கழகத் தலைவர் முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலை நிறைவேற்றும் விதமாக களமிறங்கியது, கழக இளைஞர் அணி .
முதற்கட்ட போட்டிகளுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுள் சிறந்த போட்டியாளர்களைத் தேர்வு செய்ய, 78 நடுவர்கள் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட 40 மாவட்டங்களுக்கும் பயணித்தனர்.
மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 913 போட்டியாளர்களுக்கும் மண்டல அளவில் பங்கேற்பதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 8 இடங்களில் நடைபெற்ற மண்டல அளவிலான பேச்சுப் போட்டி மூலம், 182 பேச்சாளர்கள் மாநில அளவிலான இறுதிப் போட்டிக்குக் களம் காணத் தயாராகிவிட்டனர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் தொடங்கி, இன்றைய இளம் தலைமுறைப் பேச்சாளர்கள் வரையிலான, திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் இணைய காத்திருக்கும் போட்டியாளர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். இறுதிப் போட்டியைக் காண உங்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
கழகம் வளர்க்க, இளம் பேச்சாளர் படையே திரள்க! உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக. இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள திராவிட இயக்கத்தின் அடுத்தத்தலைமுறை பேச்சாளர்களின் பட்டியலை, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்படைத்தோம். நம் இளம் பேச்சாளர்கள் வாழ்வில் பல உயரங்களைத் தொட என் அன்பும், வாழ்த்தும்... இதில் கவனம் பெற்ற 182 இளம் பேச்சாளர்களையும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறுகிற கழக நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக்கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொண்டிருந்தோம் என்று துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.
மதிவதனி: நேற்று நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டியில் பேச்சாளர் மதிவதனி பேசிய போது முதல்வர் ஸ்டாலின் தந்த ரியாக்சன் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
நேற்று மதிவதனி பேசுகையில்.. மேடையில் இருந்த மைக் உயரம் அவருக்கு எட்டவில்லை. இதையடுத்து அவர் இருந்த பகுதியில் புதிய மேடை போடப்பட்டது. இந்த மேடை மீது ஏறிய அவர்.. திராவிடத்தால் உயர்ந்தோம் .. திராவிடத்தால் உயர்வோம்.. திராவிடத்தால் வாழ்வோம் என்று குறிப்பிட்டார். அவர் டைமிங்கில் கூறியதை கேட்டு சட்டென முதல்வர் ஸ்டாலின் வியப்பாக சிரித்தார். அவரை பார்த்து ஸ்டன் ஆகிப்போய் உடனே எம்பி ஆ. ராசா சிரித்தார்.
இதையடுத்து பேசிய மதிவதனி.. இந்த மேடை உயரமாக இருக்கிறது. உயர்வது முக்கியம்தான்.. ஆனால் இவ்வளவு உயரம் எனக்கு ஆகாது என்றபடி சிரித்தபடி பேசினார்.












Click it and Unblock the Notifications