சிறந்த மாநகராட்சியாக தேர்வான ஆவடி.. 3 நகராட்சிகளுக்கும் விருது வழங்கினார் முதல்வர்
சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 மாநகராட்சி மற்றும் 3 மாநகராட்சிக்கு விருதுகளை வழங்கியுள்ளார்.
சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு சுதந்திர தினத்தில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று முதல்வர் விருதுகளை வழங்கி கவுரவித்திருக்கிறார்.

சிறப்பாக செயல்பட்டதாக ஆவடி மற்றும் நாமக்கல் மாநகராட்சிக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள மாநகராட்சிகளுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசுக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமாா், நாமக்கல் மாநகராட்சி மேயர் டி.கலாநிதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதேபோல சிறந்த நகராட்சிகளுக்கான விருது, ராஜபாளையம், ராமேஸ்வரம், பெரம்பலூர் நகராட்சிகளுக்கு கொடுக்கப்பட்டன. விருதுகளை நகர்மன்ற தலைவர்கள் பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்), நாசர்கான் (ராமேசுவரம்), அம்பிகா ராஜேந்திரன் (பெரம்பலூர்) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முதல் 3 இடங்களைப் பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகள் அளிக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications