கொட்டித் தீர்த்த கனமழை! மதுரையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்! முதல்வர் ஸ்டாலின் தகவல்
சென்னை: மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க இராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.
மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அண்மைக்காலமாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் இரவும் பலத்த மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. குறிப்பாக செல்லூர், முல்லை நகர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடங்களில் மட்டும் 4.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. அது போல் காலை முதல் மாலை வரை 9.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புறநகர் பகுதிகளான சர்வேயர் காலனி, புதூர், பனங்காடி, பாரத நகர், பி.பி. குளம், முல்லை நகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர் கடும் அவதியடைந்துள்ளனர். அது போல் மதுரை நகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சாரல் மழை மட்டுமே பெய்தது. உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கனூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை முடுக்கிவிடுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications