மகப்பேறு விடுப்பு! பெண் அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக உயர்த்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்களின் பதவி உயர்வுக்காக மகப்பேறு விடுப்பு காலத்தையும் அனுபவமாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக உயர்ந்துள்ளது என அறிவித்தார்.
அது போல் பொங்கல் பரிசுத் தொகை ரூ 1000 உயர்கிறது. அரசு ஊழியர்களுக்கு 01.01.2025 முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும். அரசு அலுவலகர்கள் ஈட்டிய விடுப்புக்கு பண பலன் பெறுவது இந்த ஆண்டே அமலாகிறது.
அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் 10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
9 மாதங்கள்
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அவ்வாறு மகப்பேறு விடுப்பில் செல்லும் ஊழியர்களுக்கு பதவி உயர்வின் போது அந்த விடுப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதை இல்லை.
பெண் ஊழியர்கள்
இதனால் பெண் ஊழியர்கள் பலர் சீனியாரிட்டி இருந்து பதவி உயர்வு இல்லாமல் இருந்து வருகிறார்கள். எனவே இளம் பெண்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இனி மகப்பேறு விடுப்பும் பணிக்காலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
3 மாதங்கள்
அரசு ஊழியர்களுக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்களாக இருந்த மகப்பேறு விடுப்பை கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார்.
6 மாதங்களிலிருந்து 9 மாதங்கள்
இதைத் தொடர்ந்து 6 மாதத்தை 9 மாதங்களாக உயர்த்துவதாகவும் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். பிரசவத்திற்கு முன்பும் பின்பும் எத்தனை மாதங்கள் பிரித்து விடுப்பு எடுக்கலாம் என்பதை அந்தந்த பெண் ஊழியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
9 மாதங்களிலிருந்து 12 மாதங்கள்
இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டின் போது அறிவித்திருந்தார்.
2021 பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும். இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சினை என்ன
இவ்வாறு மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண்களின் பதவி உயர்வை கணக்கில் எடுக்கும் போது அவர்கள் பணியாற்றியதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் மகப்பேறு விடுப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால் ஏராளமான பெண்களுக்கு தகுதி இருந்து பதவி உயர்வு, பணப்பலன்கள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை என அதிருப்தி நிலவி வந்தது.
சட்டசபை தேர்தல் 2026
இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் மனதை முதல்வர் ஸ்டாலின் குளிர வைக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications