கடைசி நேரத்தில் வராத நிதிஷ் குமார்.. அப்செட்டான திமுக.. மாறப்போகும் காட்சிகள்? போச்சே!
சென்னை: கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளாதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக தரப்பில் அவரை வரவேற்க பிரமாண்டமான வரவேற்புகள் செய்யப்பட்டிருந்தன. அங்கே தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள இருந்தார்.
7,000 சதுர அடி பரப்பளவில் 12 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் உடன் இணைந்து நிதிஷ் குமார் திறந்து வைக்க இருந்தார்.

ஆனால், கடைசி நிமிடத்தில், உடல் நிலையை காரணம் காட்டி கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வர இயலாத சூழலை திமுக தலைமைக்கு தெரிவித்துவிட்டார் நிதிஷ். அதாவது விழாவுக்கு வருவதை கேன்சல் செய்துவிட்டார்.
இது, ஸ்டாலினை மிகவும் அப்செட்டாக்கி விட்டதாம். ஏற்கனவே, சென்னையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வருவதாகச் சொல்லியிருந்த ஜனாதிபதி முர்மு முதலில் வருவதாக கூறி இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் வர இயலவில்லை என ஸ்டாலினிடம் தேரிவித்த அவர், விழாவை புறக்கணித்து விட்டார்.
வரவில்லை: முதல்முறையாக ஜனாதிபதி ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள போகிறார் என்பதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. அதை ஜீரணிக்கவே ஸ்டாலினுக்கு வெகு நாட்கள் ஆனது. தற்போது கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க நிதிஷிம் வராதது ஸ்டாலினை மிகவும் அப் செட்டாக்கி விட்டதாம்.
மிகவும் வருத்தமாக இருந்தார். இந்த நிலையில், வருகிற 23-ந்தேதி நிதீஸ் தலைமையில் கூடும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சமீபத்தில் ஒப்புதல் கொடுத்திருந்தார் ஸ்டாலின். அதனால் அந்த கூட்டத்துக்கு போக கூடாது என சீனியர்கள் வலியுறுத்துகிறார்களாம்.
அதனால் அவரது பீகார் பயணம் மாறுதலுக்குட்பட்டது என்கிறார்கள். நிதிஷ் கடைசி நேரத்தில் உடல்நிலை காரணமாக கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்றும் திமுகவினர் சந்தேகிக்கின்றனர்.
பீகார் மோதல்: முக்கியமாக சமீபத்தில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அம்மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக, "தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
ஆனால் இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது" என்று இரண்டு வீடியோக்களை ஆதாரமாக காட்டி அமளியை கிளப்பினர். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழ்நாடு வந்துவிட்டு சென்ற மறுநாளே இந்த வதந்தி பரப்பப்பட்டது.
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாடு வந்த நிலையில், அவருக்கு அழுத்த தர வேண்டும் என்று பாஜக சார்பாக அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அவர் விளக்கம் அளித்தும் கூட அம்மாநில பாஜக இந்த விவகாரத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. தேசிய அளவில் ஸ்டாலின் கூட்டணி அமைக்க வேண்டும், ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்ற குரல்களுக்கு இடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பம் வடஇந்தியர்கள் இடையே பரப்பப்பட்டு வந்தன.
இதனால் இந்த முறையும் அதேபோல் நடக்க கூடாது என்பதால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பயணத்தை தவிர்த்துவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், தேசிய அளவில் நிதிஷ்குமார் கூட்டும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளாமல் டி.ஆர்.பாலு கலந்துகொள்வார் என நிதிஷ்குமாருக்கு தெரிந்ததால் தான், கலைஞர் கோட்டத்தை நிதிஷ் திறந்து வைக்க வரவில்லையாம் என்று திமுக தரப்பிலே சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications