ஸ்டாலினுக்கு மேகதாது பற்றி கவலை இல்லை.. அமலாக்கத்துறை வீட்டுக்கு வந்துடுவாங்கனு பயம்.. ஜெயக்குமார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை என்றும், அமலாக்கத்துறை எப்போது நமது வீட்டுக்கு வரும் என்ற கவலைதான் இருப்பதாகவும், திமுக அமைச்சர்கள் எல்லோரும் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வது போல இப்போது முதல்வரும் அமைச்சர்களும் ஈடி (அமலாக்கத்துறை) வந்து விட்டதா, இன்கம் டேக்ஸ் வந்து விட்டதா யார் வந்து இருக்கா என்றுதான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நிர்வாகத்தில் இப்போது அவர்கள் கவனம் செலுத்தவில்லை. தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வழிமுறையைதான் தேடுகிறார்கள்.

முதலில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஆரம்பித்தது.. இப்போ பொன்முடிக்கு ஆரம்பித்தது.. அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆரம்பிக்க போகிறது.. பொன்முடிக்கு இரவெல்லாம் தூக்கம் இருக்காது. அவரை பொறுத்தவரை எப்போ கைது ஆவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின் தூக்கத்தை எல்லாரும் அமைச்சர்களும் கெடுத்தது போல இன்னைக்கு எல்லா அமைச்சர்களும் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தூக்கம் இல்லாமல் இருக்கும் ஒரு கேபினட் தான் இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை. செந்தில் பாலாஜி சிறைக்கைதி. அவரை நீக்குவதுதான் முறை. அந்த அடிப்படையில் தான் ஆளுநரிடம் மனு கொடுத்தோம். செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதில் என்ன பிரச்சினை. ஏன் அமைச்சர் என்ற ஷீல்டு இன்னும் வைத்து இருக்கிறீர்கள். தெண்ட செலவு எதற்கு?
செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு கொடுப்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் வீட்டில் இருப்பது போல எல்லா வசதியும் கொடுத்தால் அது தவறு. முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு காவிரி பற்றியோ முல்லை பெரியாறு பற்றியோ கவலை கிடையாது. மேகதாது பற்றியோ கவலை கிடையாது. அவருக்கு கவலை எல்லாம் அமலாக்கத்துறை எப்போது நம்ம வீட்டுக்கு வரும்.. வருமான வரித்துறை எப்போது நம்ம வீட்டுக்கு வரும், ஆட்சி எப்போது கலையும் என்ற கவலைதான் அவருக்கு உள்ளது.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications