நீங்களா பேசுறீங்களா? இல்ல யாராவது சொல்லி கொடுத்தார்களா? பெண்ணிடம் கேட்ட முதல்வர்! கே.என்.நேரு குபீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்களா பேசுறீங்களா இல்லை யாராவது சொல்லிக் கொடுத்து பேசுறீங்களா என மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடக்க விழாவில் வந்த பெண்ணிடம் முதல்வர் ஸ்டாலின் நகைச்சுவையாக கேட்டார். அப்போது அருகே இருந்த அமைச்சர் கே.என்.நேரு குபீரென சிரித்துவிட்டார்.

மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடக்க விழா இன்றைய தினம் தொடங்கியது. தருமபுரியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தருமபுரிக்கென ஒரு வரலாறு இருப்பதால்தான் அங்கு இந்த விழாவை முதல்வர் தொடங்கி வைத்தார்.

CM Stalin jovially ask a woman who praise him for his regime

அதாவது மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த போது மகளிர் சுய உதவிக்குழுக்களை தருமபுரியில்தான் தொடங்கி வைத்தார். இந்த சுய உதவிக்குழுக்களை கொண்டு இன்று வரை எத்தனை பெண்கள் வங்கிகளில் குறைந்த வட்டியில் கடனை வாங்கி சிறுதொழில் செய்து வருகிறார்கள்.

படித்தாலும் படிக்காவிட்டாலும் பெண்கள் ஆணுக்கு சமம் என்பதை உணரவைத்த இந்த தருமபுரியில்தான் இன்று முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கான உரிமைத் தொகை முகாமை தொடக்கி வைத்தார். அப்போது அங்கு வந்த பெண்களிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், திட்டம் குறித்து விளக்கினார். மேலும் இந்த திட்டம் உங்களுக்கு எத்தனை உதவியாக இருக்கும் என்பதையும் அவர்களிடமே கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

அப்போது மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை எப்படி ஆய்வு செய்கிறார்கள் என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் முன்பு ஒரு திரை வைக்கப்பட்டிருந்தது. அதில் பயனாளி கைரேகை வைத்த பின்பு செல்போனிலேயே என்னென்ன தகவல்கள் கிடைக்கிறது என்பதை திரையில் பார்த்தார். மேலும் விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன் பெண்ணின் செல்போனுக்கு வந்த மெசேஜை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இதுகுறித்து விளக்கமளித்தார்.

விண்ணப்பத்தை கொடுத்துவிட்டீர்கள். இந்த உதவித் தொகை திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவரா என அதிகாரிகள் ஆய்வு செய்து உங்களுக்கு தகவல் சொல்வார்கள் என்றார். மேலும் அங்கிருந்த பெண்கள் இந்த திட்டம் குறித்து பேசினர். அப்போது பெண் ஒருவர் தான் கூலி வேலைக்கு செல்வதாகவும் அதில் மாதத்தில் 10 நாட்கள் சும்மா இருப்பதாகவும் மீதம் உள்ள நாட்களில் சென்றால் குறைந்த அளவு ஊதியத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும்.

பிளஸ் 2 முடித்த என் மகளையும் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம் இந்த ரூ 1000 எனக்கு உதவியாக இருக்கும் என்றார்.பின்னர் இன்னொரு பெண்ணோ இந்த திட்டம் எங்களுக்கு உதவியாக இருக்கும். அதை அறிவித்த முதல்வருக்கு நன்றி. அதிலும் எங்கள் தருமபுரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை அறிவித்தது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. உங்களை பார்க்கும் போது கடவுளே நேரில் வந்து வரம் கொடுத்தது போல் இருக்கிறது என்றார்.

உடனே முதல்வர் குறுக்கிட்டு இதெல்லாம் நீங்களா பேசுறீங்களா இல்லை யாராவது சொல்லிக் கொடுத்து பேசுறீங்களா என கேட்டார். அதற்கு அந்த பெண் இல்லை சார் உங்களை பார்த்ததும் மனதில் இருப்பது வெளியே வருகிறது என்றார். உடனே முதல்வர் ஆட்சி எப்படி இருக்கிறது என கேட்டார். அதற்கு அந்த பெண் நன்றாக இருக்கிறது சார் என்றார். முதல்வர் நகைச்சுவையாக கேட்ட போது அங்கிருந்த பெண்களும் அதிகாரிகளும் சிரித்துவிட்டனர். பொதுவாக இது போல் நலத்திட்டங்கள் என்றால் அந்த விழா ஏற்பாட்டாளரோ கட்சி நிர்வாகிகளோ இப்படி பேசுங்கள் சொல்லித் தருவார்கள். இதை அறிந்து கொண்டே ஸ்டாலின், அந்த பெண்ணிடம் அப்படி ஒரு கேள்வியை எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+