இனி ரேஷன் பொருள் வீடு தேடி வரும்.. தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வர் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.30.16 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தனியாக வசித்து வரும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முதல்வர் தாயுமானவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சிறப்புக் கவனம் தேவைப்படும் 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 முதியவர்கள், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என்று மொத்தமாக 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. இவர்கள் அனைவருக்கும் முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் மாநிலம் முழுவதும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனை ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தத் திட்டத்தின் பயன்பெற தகுதியான குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடம் இருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தராசு, விற்பனை முனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருள்களை பாதுகாப்பாக, தகுதியுள்ள பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.30.16 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பயனாளர்களுக்கும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications