ஸ்டாலின் அவர்களே.. கதறிய மீரா மிதுன்.. குற்றவாளிகளை லிஸ்ட் போட்ட முதல்வர்.. வியக்க வைத்த அதிரடிகள்
மீரா மிதுனை சுட்டிக்காட்டி உரையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "பட்டியலினத்தவரை விமர்சித்துபேட்டி அளித்த ஒரு நடிகை உடனடியாக கைது செய்யப்பட்டார்" என்று மீராமிதுன் உட்பட கைதானவர்களை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியது கவனிக்கத்தக்கதாக அமைந்து வருகிறது.
"என்னை தாராளமாக கைது செய்யுங்கள். ஏன் காந்திஜி, நேருஜி எல்லாம் ஜெயிலுக்கு போகவில்லையா. என்னை கைது செய்ய முடியாது. அது கனவில் வேண்டுமானால் நடக்கலாம்'' என்று பேசி கடந்த மாதம் மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
பிறகு, அடுத்த சில தின்ஙகளில், அவரை கைது செய்ய போலீசார், அவர் தங்கியிருந்த வீட்டினுள் நுழைந்தனர்.. போலீசாரை பார்த்ததுமே, தன்னுடைய செல்போனை ஆன் செய்து பேச ஆரம்பித்துவிட்டார்.

முதலமைச்சர்
அதில் அவர், இவங்க எல்லாரும் என்ன டார்ச்சர் பண்றாங்க.. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, ஒரு பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கணுமா? எல்லாரையும் வெளிய போக சொல்லுங்க... இவங்க ஒரு கை என் மேல பட்டுச்சுனா நான் இங்கையே என்ன கத்தியால குத்திக்கிட்டு செத்துடுவன்... தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, ப்ரைம் மினிஸ்டர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாடு போலீஸ் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க..." என்று கதறி அழுதார்.

ஆதரவு
முதல்வரிடம் போலீசாரை பற்றி புகார் சொன்னால், உதவி செய்வார், அல்லது ஆதரவு தருவார் என்று மீரா நினைத்தாரா தெரியவில்லை.. மீராவின் கதறல் அனைத்துமே வீணானது.. சட்டம் தன் கடமையை தற்போதுவரை சரியாக செய்து கொண்டிருக்கிறது.. நேற்றைய தின பேரவை கூட்டத்தில், மீராவை மட்டுமல்ல, இந்த 2 மாத காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களை லிஸ்ட் போட்டு முதல்வர் பேசியிருந்தார்..

விளக்கம்
காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.. அத்துடன் மக்களுக்கு இந்த திமுக அரசு, அனைத்து வழியிலும் பாதுகாப்பாக இருந்து வருகிறது என்பதையும் விளக்கி சொன்னார்..

காவல்துறை
குறிப்பாக, "இந்த அரசைப் பொறுத்தவரையில், குற்றம் என்ற ஒன்று நடந்தால் சாதி, மதம், இனம், மொழி, கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் காவல் துறைக்குக் கண்டிப்பான உத்தரவை
வழங்கியிருக்கிறேன்... அதனடிப்படையில், தனியார் பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு ஆசிரியர்மீது புகார் வந்ததும், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். விளையாட்டுப்
பயிற்சியாளர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள்.

பட்டியலினம்
பாலியல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து தனியார் பள்ளி உரிமையாளர் ஒருவரை உடனடியாகக் கைது செய்தோம். பட்டியலினத்தவரை விமர்சித்து பேட்டி அளித்த ஒரு நடிகை உடனடியாகக் கைது செய்யப்பட்டார். PUBG விளையாட்டு மூலமாக Youtube Channel-ல் ஆபாசமாக நடந்துகொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். இவற்றை நினைவூட்டுவதற்குக் காரணம், புகார் எழுந்ததும், எவரையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்யும் அரசாக இந்த அரசு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் இதைச் சொன்னேன்" என்றார்.

இரா.முத்தரசன்
முதல்வர் ஸ்டாலின் சொன்ன இதே கருத்தைதான் 2 மாதங்களுக்கு முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.முத்தரசன் தன்னுடைய பேட்டியில் சொல்லி இருந்தார்.. அதில், "அதிமுக ஆட்சி காலத்தில்தான் பலாத்கார வன்முறை சம்பவங்கள் எல்லாம் ஊக்குவிக்கப்பட்டன.. அதுதான் பிரச்சனை.. பொள்ளாச்சி சம்பவத்திலேயே அந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்குமேயானால், அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்ந்திருக்காது..

தலித் பெண்
ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த தவறுகளை ஒட்ட நறுக்கும்... பிராமணர்கள் பிராமணராக பிறந்துவிட்டால் என்ன வேணும்னாலும் செய்யறதா? பிராமண பெண்ணை தவிர சூத்திர பெண், தாழ்த்தப்பட்ட பெண்கள்தானே பாதிக்கப்படுகிறார்கள்.. முதலில், இதுபோன்ற பாலியல் சமாச்சாரங்களில் சாதி, மதம், அரசியலை கலக்கவே கூடாது.. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் அவ்வளவுதான்.. இதை முதல்வர் நிச்சயம் செய்வார்!" என்றார்.

புகார்
2 மாதத்துக்கு முன்பு சொன்னதைதான், நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்தி உள்ளார்.. குற்றவாளிகள் மீது தயவுதாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது தெளிவாகி உள்ளது.. இது தமிழக மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்து வருகிறது.. மொத்தத்தில் இந்த காவல்துறை மீதான மான்ய கோரிக்கையானது, போலீசாருக்கும் நிறைய சலுகைகளை அறிவித்துள்ளது.

இணையதளம்
பொதுமக்களுக்கும் அரசின் மீதான நம்பகத்தன்மையை கூட்டி உள்ளது. அதுமட்டுமல்லாமல், இணையதளங்கள் மூலமாக பாலியல் குற்றங்களும் அதிகமாகி வருவதாலும், நிதிக் குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நவீன தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதாலும், இதனை கண்டுபிடித்து தடுப்பதற்கான நவீன வழிமுறைகள் கொண்டதாக தமிழ்நாடு காவல் துறை நிச்சயமாக மாற்றியமைக்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளதால், அதன்மீதான எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications