மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாளு அம்மாள் வீடு திரும்பினார்!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் இன்று மாலை வீடு திரும்பினார். மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல்நலம் தேறியதையடுத்து அவர் இன்று வீடு திரும்பினார். முன்னதாக அவரை முதல்வர் ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். இவருக்கு கடந்த 4 ஆம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 92 வயதான தயாளு அம்மாளுக்கு வயது முதிர்வு காரணமாக மூச்சத்திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தயாளு அம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் மறுநாள் நேரில் ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதேபோன்று முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரியும் நேரில் சென்று பார்வையிட்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதேபோன்று கருணாநிதி குடும்பத்தினர் பலரும் தயாளு அம்மாளு உடல்நலம் குறித்து ஆஸ்பத்திரிக்கு வந்து கேட்டறிந்தனர்.
தயாளு அம்மாளுக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலையில் தயாளு அம்மாள் வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications