பிளான் வச்சி இருக்கோம்.. வாட்ஸ் ஆப்பில் வந்த எடப்பாடி போட்டோ.. இனி நடக்க கூடாது! களமிறங்கிய ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் பொதுப்பணித்துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளார் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. வாரம் வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆவது போல வாரம் ஒரு காற்றழுத்த மாற்றம் வங்கக்கடலில் ஏற்பட தொடங்கி உள்ளது.
இந்த மாதம் முதல் வாரத்தில் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இதனால் அந்த வார இறுதி வரை கனமழை பெய்தது.

சென்னை
முக்கியமாக சென்னையை குறி வைத்து கனமழை பெய்தது. அதன்பின் இரண்டாவது வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. இதிலும் கனமழை பெய்தது. இதையடுத்து இன்றோ நாளையோ இன்னொரு தாழ்வு பகுதி ஏற்படும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

எவ்வளவு மழை
சென்னையில் முதல் 14 நாட்களில் 45 செமீ மழை வரை பெய்து உள்ளது. மாத இறுதி வரை மழை பெய்யும் பட்சத்தில் 80 - 100 செமீ வரை இந்த நவம்பர் மாதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு மழை பெய்தும் சென்னையில் எங்கும் வெள்ளம்ஏற்படவில்லை. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சென்னை சிட்டிக்கு உள்ளே வளசரவாக்கம், கத்திப்பாரா உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுமே தண்ணீர் தேங்கியது.

முகலிவாக்கம் எடப்பாடி
தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வேகமாக தண்ணீர் வடிந்து உள்ளது. ஆனால் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வேகமாக வடியவில்லை. புறநகர் பகுதிகளில் வேகமாக வெள்ளம் வடியாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில்தான் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இந்த தண்ணீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டார். முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். ஆனால் அங்கும் கூட கணுக்கால் வரை மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது.

தண்ணீர்
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் நிற்கும் புகைப்படங்களும், இங்கு வெள்ளம் வடியாத புகைப்படங்களும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் சார்பாக வாட்ஸ் வழியாக புகைப்படங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் முதல்வர் தரப்பிற்கும் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி ஒருவர்.. சென்னையில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கு எல்லாம் இன்னும் வெள்ள நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. அங்குதான் மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்றினோம்.

மோட்டார்
புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான். மழை முடிந்த பின் அங்கும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கும். அதற்கான பிளான்களை வச்சி இருக்கோம் என்று தெரிவித்து உள்ளனர். அதன்படி சென்னையில் கால்வாய் அமைக்கப்படாத இடங்களில் மழை முடிந்ததும் உடனே கால்வாய் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கே இனி தண்ணீர் அடுத்த மழை சீசனுக்கு தேங்க கூடாது. அதேபோல் தற்போது அமைக்கப்பட்டு உள்ளன கால்வாய் காரணமாக சேதம் அடைந்த சாலைகளையும் சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் தரப்பில் பொதுப்பணித்துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் உத்தரவு போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications