“டபுள்”.. போலீசார் குடும்பங்களுக்கு ‘ஸ்வீட் ஷாக்’ கொடுத்த முதல்வர் ஸ்டாலின்! கல்வி உதவித்தொகை உயர்வு
சென்னை: காவலர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு, காவலர்களின் குழந்தைகளுக்குக் கல்விப் பரிசுகள் வழங்குவதற்கான நிதியை 'டபுள்' மடங்காக உயர்த்தியும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி உதவித்தொகை ரூ. 25 ஆயிரத்தில் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் என்றும், இனிமேல் 100 மாணவர்களுக்கு பதிலாக 200 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காவலர்களின் குழந்தைகளின் சிறப்புக் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். உயர்த்தப்பட்ட சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விப்பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக, தமிழ்நாடு காவலர் நல நிதிக்கு அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ.1.2 கோடியிலிருந்து ரூ.2.96 கோடியாக உயர்த்தியும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்டு ஒன்றுக்கு காவலர்களின் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்படி 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும், காவலர்களின் குழந்தைகளுக்குக் கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், காவலர்களின் குடும்பத்தைச் சார்ந்த 200 மாணவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு மொத்தம் ரூ.24 கோடியில் சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், 37 காவல் மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்குக் கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முறையே முதல் பத்து இடங்களைப் பெறும் 460 மாணவ, மாணவியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மொத்த கல்விப் பரிசுத்தொகையை ரூ.28,29,000ல் இருந்து ரூ.56,58,000 ஆக இரட்டிப்பாக்கி கல்விப்பரிசுகள் வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் உயர்த்தப்பட்ட சிறப்புக் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விப்பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக, தமிழ்நாடு காவலர் நல நிதிக்கு அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ.1.2 கோடியிலிருந்து ரூ.2.96 கோடி ஆக உயர்த்தியும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications