ஒரே சம்பவம்.. தேசிய அளவில் டிரெண்ட்.. வடஇந்தியாவே உற்றுநோக்கும்.. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கைக் குழு
சென்னை: சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தை தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
தொகுதி மறுவரையை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க மூன்று மாநில முதல்வர்கள் சென்னை வந்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பவன் கல்யாண் கட்சியும் பங்கேற்கிறது. கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சி முன்னாள் எம்பி உதய் சீனிவாஸ் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பது அரசியல் வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏன் இந்த கூட்டம்
தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அப்படியே ஒருவேளை அதிகரித்தாலும்.. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகாரில் எம்பிக்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.

மக்கள் தொகை அடிப்படையில்தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் நடைபெறும் கிண்டி ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில் கவனம்
சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தை தீவிரமாக கவனித்து வருகின்றனர். தேசிய அளவில் பல மாநில மக்கள், பல மாநில அரசியல் பிரமுகர்கள் இன்னும் பலர் இந்த கூட்டம் பற்றி வியப்பாக போஸ்ட் செய்து வருகின்றனர்.
அதிலும் தமிழ்நாடுதான் இது போன்ற விவகாரங்களில் மக்களின் உரிமையை காக்கிறது, மாநிலங்களின் உரிமையை காக்கிறது என்று போஸ்ட் செய்து வருகின்றனர். இதன் மூலம் ஸ்டாலினும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். ஏனென்றால் இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை இரண்டையும் பற்றி முதலில் குரல் கொடுத்தது ஸ்டாலின்தான். இதற்காக கூட்டத்தை கூட்டியதும் ஸ்டாலின்தான். பல மாநில தலைவர்கள் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளதால் அந்தந்த மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தை தீவிரமாக கவனிக்க தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பவன் கல்யாண் கட்சியும் பங்கேற்கிறது. கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சி முன்னாள் எம்பி உதய் சீனிவாஸ் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பது அரசியல் வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications