ஏகப்பட்ட சீனியர்கள் சீட் கேட்கிறார்கள்.. ஸ்டாலின் பிரம்மாஸ்திரம்.. மீண்டும் வருகிறது சட்ட மேலவை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கான சீட் எண்ணிக்கை, தொகுதிகளை அடை யாளம் காண்பது உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக தலைமை சீரியஸ் காட்டி வரும் அதே வேளையில், திமுகவில் சீனியர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு சில யோசனைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து ஓய்வு பெற்ற திமுக ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சர்வீசில் இருக்கும் உயரதிகாரிகள், திமுக ஆதரவு இண்ட்லெக்சுவல்கள், மாப்பிள்ளை சபரீசன் உள்ளிட்ட வர்களிடம் 2026 தேர்தல் தொடர்பாக அவ்வப்போது தனித்தனியாக ஆலோசித்து வருகிறார் ஸ்டாலின்.

tamil nadu assembly elections 2026 congress

அந்த ஆலோசனைகளில், ''இந்த தேர்தலில் சீனியர்கள் பலருக்கும் போட்டியிட வாய்ப்புத் தர வேண்டாம். அவர்களை கட்சி பணிக்கு அனுப்பலாம். தேர்தல் முடிவு களுக்கு பிறகு அவர்களை எப்படி, எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கலாம் '' என்று ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பல சீனியர்களுக்கு சீட்டு வேண்டாம் - ஸ்டாலின்

தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருக்கும் சீனியர்கள், தொகுதியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள சீனியர்கள் என சிலருக்கு சீட் தர வேண்டாம் என்பதில் ஸ்டாலினுக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. இதற்காக, உளவுத்துறையிடமும், திமுக வின் தேர்தல் வியூக அமைப்பான பென் நிறுவனத்தின் தலைவர் சபரீசனிடமும் ரிப்போர்ட் கேட்டிருந்தார் ஸ்டாலின்.

அண்மையில் சீனியர்கள் தொடர்பான தங்களின் ரிப்போர்ட்டுகளை உளவுத் துறையும், பென் நிறுவனமும் கொடுத்துள்ளன. அதில் முக்கிய சீனியர்கள் பலர் மீது நெகட்டிவ் ரிப்போர்ட் தாக்கலாகியிருக்கிறது. அதனடிப்படையில் சீனியர்களுக்கு எதிராக கடினமான முடிவுகளை ஸ்டாலின் எடுக்கவிருப்பதாக திமுக தரப்பில் பரவி யுள்ளது.

சீனியர்கள் பலர் மீது நெகட்டிவ் ரிப்போர்ட்

இதுகுறித்து திமுக தரப்பிலும் உளவுத்துறை வட்டாரங்களிலும் விசாரித்த போது, ''திமுக அரசு மீதும், தலைவர் ஸ்டாலின் மீது மக்களிடம் எந்தவிதமான அதிருப்தியும் இல்லையென்றாலும், திமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் மீது அதிருப்திஇருக்கத்தான் செய்கிறது. அவர்களின் தொகுதியில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் அதைத் தான் சொல்கின்றன. மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலினும், மீண்டும் திமுக அரசும் தான் வர வேண்டும் என்று சொல்கிற தொகுதி மக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

அந்த வகையில், சீனியர்கள் சிலருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்புத் தர வேண்டாம் என ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருப்பதால் அது குறித்து தீவிர ஆலோச னையில் இருக்கிறார் தலைவர் ஸ்டாலின். குறிப்பாக, துரைமுருகன், கே.கே.எஸ். எஸ்.ஆர்., ராஜகண்ணப்பன், பொன்முடி, ஐ.பெரியசாமி, காந்தி, ஆவுடையப்பன் உள்ளிட்ட 10 நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை. இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவர்களின் ரியாக்‌ஷன் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை மற்ற சீனியர்களிடம் விவாதிக்கும் முடிவில் இருக்கிறது எங்களின் தலைமை'' என்கிறார்கள் திமுக தரப்பினர்.

ஸ்டாலின் மாஸ்டர்பிளான்

சீனியர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்கிற போது, நிச்சயம் அவர்கள் தலைமை மீது அதிப்தியடைவார்கள். அதனால் அதனை எப்படி சமாளிப் பது? அவர்களை எப்படி சமாதானம் செய்வது? என்கிற யோசனையும் திமுக தலைமையிடம் இருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமையும் போது தமிழகத்தில் சட்ட மேலவையைக் கொண்டு வரும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். அப்போது, சட்டப்பேரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சீனியர்களையெல்லாம் சட்ட மேலவைக்கு கொண்டு வந்து விடலாம். இதை வைத்து அவர்களை சமாதானப்படுத்தி விடலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறது திமுக தலைமை என்கிறார்கள் உளவு வட்டாரத்தினர்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+