லோக்சபா தேர்தலுக்கு இடையே.. அழைத்த உதயநிதி.. மாலத்தீவிற்கு பறக்கும் ஸ்டாலின்? என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் திடீரென மாலத்தீவு புறப்படும் திட்டத்தில் இருக்கிறாராம்.
கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக அமைச்சர்கள்,வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் சந்தித்தார் ஸ்டாலின்.

கடந்த 5 நாட்களாக இந்த சந்திப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து சற்று விடுபடுவதற்காகவும், பிஸியான செட்யூல்டிலிருந்து ஓய்வு எடுக்கவும் மாலத்தீவுக்கு குடும்பத்தினருடன் சென்று வர வேண்டுமென ஸ்டாலினிடம் உதயநிதி பேசியிருக்கிறார்.
குடும்பத்தினரும் அதனை விரும்பியுள்ளனர். இதனை அடுத்து திங்கள் கிழமை கிளம்பி மே மாதம் 5 - ந்தேதி சென்னை திரும்புவதற்கேற்ப ஸ்டாலின் குடும்பத்தினர் ப்ரோக்ராம் போட்டுள்ளனர். ஸ்டாலினும் இதற்கு சம்மதித்ததாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின், 1 வாரம் மாலத்தீவு செல்கிறார் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
வடஇந்தியா பிரச்சாரம்: இவர் 1 வாரம் விடுமுறையை கழித்த பின் மீண்டும் தமிழ்நாடு வந்து அதன்பின் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவார். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில்,'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மே 2ம் வாரம் அவர் வடஇந்தியாவில் பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கலாம் என்கிறார்கள். அதற்கு முன் இவர் வடஇந்திய பயணத்தை முடித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
தேர்தல்; தமிழ்நாட்டில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை லோக்சபா தேர்தல் நடந்தது. இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நாடு முழுக்க கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது. தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன.
தமிழ்நாடு தேர்தல்; தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமா தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
ஸ்டாலின் ஆலோசனை; இந்த தேர்தல் முடிந்த நிலையில்.. முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான மீட்டிங்குகளை நடத்தி உள்ளார். முதல் மீட்டிங் திமுக நிர்வாகிங்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் இடையே நடந்துள்ள மீட்டிங். இரண்டாவது மீட்டிங் நேற்று காங்கிரஸ் தலைவர்களுடன் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் திமுக தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 40ல் வெல்லும்.கோவையில் திமுகவே வெல்லும். அங்கே இரண்டாம் இடம் அதிமுகவிற்கு கிடைக்கும். வட மாவட்டங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும். திருச்சி, பொள்ளாச்சி, ஈரோடுகளில் லேசான இழுபறி இருந்தாலும் திமுகவே வெல்லும். ஆனால் தென் மாவட்டங்களில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லாது. காரணம் அங்கே வாக்குகள் கடுமையாக பிரிந்துள்ளது என்பது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாம்.












Click it and Unblock the Notifications