Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்கு வருது ‘ஜாக்பாட்’.. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டாட்டம் தான்! ஸ்டாலின் பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு 'ஜாக்பாட்' தர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வருடக் கடைசி, 8 மாவட்ட மக்களுக்கு பெரும் துயரமாக அமைந்துவிட்டது. கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடித்துக் கொட்டிய கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஒரு வாரத்திற்கும் மேலாக பல இடங்களில் வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.6000 நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். 6000 நிவாரணம் வழங்கும் பணிகள் தற்போது 98% முடிவடைந்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று கூறியுள்ளார்.

CM Stalin plans to give jackpot announcement as pongal festival is approaching

இந்நிலையில், கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த மிக அதிக கனமழையால் பொதுமக்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக கேள்விக் குறியாகி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைப் போலவே, கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ. 6000 வெள்ள நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பொங்கல் பரிசு: இதற்கிடையே, பொங்கல் பண்டிகை இன்னும் 3 வாரங்களில் வர இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பு தொடர்பான அரசின் அறிவிப்பை அனைத்து மாவட்ட மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அரிசி, சர்க்கரை, பருப்பு, நெய், கரும்பு உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது வெல்லம் உருகி ஓடியது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்தன.

இதையடுத்து, கடந்த ஆண்டு, பொங்கலின்போது, மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் பொங்கலுக்கு, ரூ.2000 வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால், பொங்கல் பரிசுத்தொகை அதிகரித்து வழங்கப்படும் என்ற தகவல்கள் மக்களிடையே பரவி இருப்பதே இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.

உரிமைத்தொகை: இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் முதல், தகுதியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 15ஆம் தேதி வாக்கில், ரூ.1000, அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வருவதால், முன்கூட்டியே பணத்தை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மகளிர் உரிமைத்தொகையோடு, ஜாக்பாட்டாக பொங்கல் பரிசுத்தொகையும் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகி வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 2000 மற்றும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 என குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 3,000 வரவு வைக்கப்பட உள்ளதாகவும் பேச்சுகள் நிலவி வருகின்றன. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டதால், 25 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணத்தை அரசு வழங்கியது. இதற்கு1,486 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேர்தல் நெருங்குதே: இப்போது, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சேதம் அதிகமாக இருப்பதால், அங்கும் நிவாரணம் வழங்குவதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், நிதி நிலையை பொறுத்தே பொங்கல் பரிசுத்தொகை அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதேநேரம், மகளிர் உரிமைத்தொகை, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் வழங்கப்படவில்லை. பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, சுமார் 1.13 கோடி பேருக்குத்தான் வழங்கப்படுகிறது.

எனவே, மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கவில்லை என்றால் பெரும் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இந்த முறை, நிதி நிலைமையைப் பற்றி யோசிக்காமல் தாராளமாக பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்பாட்?: அப்படியானால், 1.13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 உடன், பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2000 என மொத்தமாக 3000 ரூபாய் கிடைக்கும். மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.2000 கிடைக்கும். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 உடன், உரிமைத்தொகை + பொங்கல் பரிசு தொகையும் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு அரசு தரப்பில் இருந்து வெளியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+