Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு”.. சொன்னபடி அத்தனை உதவிகளையும் செய்து தூக்கி நிறுத்திய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த 4 குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு, பணி நியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி, திறன் பயிற்சிக்கான உதவித்தொகை ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்கிற கிராமத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் பரிதவித்தனர் ஏழு வருடங்களுக்கு முன்பே தாயையும் பறிகொடுத்த குழந்தைகள், அண்மையில் தந்தையையும் இழந்தனர். யாருமே இல்லாத நிலையில், தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு கூட காசில்லாமல் தவித்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து உடலை அடக்கம் செய்தனர்.

Kallakurichi mk stalin children

கமலக்கண்ணன், சிறுநீரக பாதிப்பு காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்ததன் காரணமாக வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது.

பொறியியல் படித்து வந்த அவரது மூத்த மகள் லாவண்யா கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதேபோல் 8 ஆம் வகுப்பு படித்து வந்த ரீனா, 10 ஆம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். அபினேஷ் மட்டும் பூட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தாய், தந்தையை இழந்த 4 குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பரிதவித்தனர். இதையடுத்து கிராம மக்களே வீடு வீடாக சென்று பணம் வசூலித்து கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனா்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தி அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தாய் தந்தையை இழந்த 4 குழந்தைகளை போனில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார். அனைவரையும் படிக்க வைத்துவிடுவோம் என உறுதி அளித்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வேண்டிய உதவிகளைச் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! இந்தச் செய்தியைப் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்!" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தக் குழந்தைகளுக்கு 2.50 லட்சம் வீட்டுமனைப் பட்டா, ரூ.3,55,660 மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் வழங்க ஆணை, லாவண்யாவுக்கு சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி நியமன ஆணை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனால், அந்தக் குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

"இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்!" என்று சொன்னபடியே,
இலாவண்யாவிற்கு -

📑 ரூ.2.50 லட்சம் வீட்டுமனைப் பட்டா
🏡 ரூ.3,55,660 மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் வழங்க ஆணை
👩‍💻 சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி நியமன ஆணை

ரிஷிகா மற்றும் அபினேஷிற்கு
🤝 அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் தலா ரூ.2000 உதவித்தொகை

ரீணாவிற்கு -
👩 திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக ரூ.6000 ஆகியவற்றை வழங்கினேன்.

நாளை எனும் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு வாழ்வில் அவர்கள் உயர்ந்திட தாயும் தந்தையுமாய் என்றும் இருக்கும் நமது திராவிட மாடல் அரசு!" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+