மிகப்பெரிய முடிவு.. மத்திய அரசு திட்டத்திற்கு எதிராக.. ஸ்டாலின் உருவாக்கும் எக்ஸ்பர்ட்ஸ் டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்க தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின், என்று தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

சென்னையில் நடைபெறும் நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். தமிழ்நாடு 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது; இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரத்தை பற்றியது.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்; நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை; எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது, குறைய விடவும் கூடாது. இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பு இது; தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பாஜக எப்போதும் இருந்து வருகிறது.

இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றின் மிக மிக முக்கியமான நாள்; மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் நம்மைப் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படும்.

CM Stalin proposes to form an expert committee in the All-Party Delimitation Meeting

தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். கூட்டாட்சித் தன்மைக்கு ஆபத்து வந்துள்ளதை உணர்ந்து அனைவரும் கூடியுள்ளோம்; சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இந்த மறுவரையறை நம்மை மாற்றிவிடும். மாநில உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது. தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்க தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் இந்த கூட்டு நடவடிக்கை குழு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

கவனம் பெறுகிறது கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பவன் கல்யாண் கட்சியும் பங்கேற்று உள்ளது. கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்று உள்ளது. ஜனசேனா கட்சி முன்னாள் எம்பி உதய் சீனிவாஸ் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்று உள்ளது. அரசியல் வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொகுதி மறுவரையை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க மூன்று மாநில முதல்வர்கள் சென்னை வந்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.


ஏன் இந்த கூட்டம்

தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அப்படியே ஒருவேளை அதிகரித்தாலும்.. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகாரில் எம்பிக்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.

மக்கள் தொகை அடிப்படையில்தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் நடைபெறும் கிண்டி ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+