2 ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. கரூர் துயரத்தால் ரத்தான பயணம் தேதி மாற்றம்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார். இன்று (செப்டம்பர் 29) ராமநாதபுரம் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 2, 3 ஆம் தேதிகளில் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தியும், நலத் திட்டங்கள் வழங்கியும் வருகிறார். அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் 29 ஆம் தேதி (திங்கள்கிழமை) வருகை தந்து, செப்டம்பர் 30 ஆம் தேதி (நாளை) மாவட்ட வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தவும், நலத் திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டது.

ராமநாதபுரத்தில் இன்று மாலை 6 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோவுக்கும், நாளை புல்லங்குடி பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து முதல்வரின் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ராமநாதபுரம் நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார். இன்று (செப்டம்பர் 29) ராமநாதபுரம் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 2, 3 ஆம் தேதிகளில் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications