ஜெர்மனியில் ஸ்டாலின்.. வரவேற்ற தமிழர்களின் அன்பால் நெகிழ்ந்து போன முதல்வர்!
சென்னை: ஜெர்மனி சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்த்துள்ளார். ஜெர்மனியில் தமிழர்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழர்களின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்வோம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் ஸ்டாலின்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் செயலர்கள், அமைச்சர் டிஆர்பி ராஜா, பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர். நேற்று இரவு 9 மணியளவில் ஜெர்மனி சென்றடைந்தார் ஸ்டாலின். அங்கு அவருக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஜெர்மனியில் தமிழர்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர்களின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்வோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செல்லும் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 31) முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். 2 ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில்முனைவோரை சந்திக்கிறார். 3 ஆம் தேதி லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் 4 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். 6 ஆம் தேதியும் அயலக தமிழர் நலவாரிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்தில் இருந்து 7 ஆம் தேதி புறப்பட்டு, செப்டம்பர் 8 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க
இதற்கிடையே, பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நிறுவனர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை தமிழ்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications