எப்படி இருக்கீங்க? நம்ம பக்கம் வந்துடுங்க! பட்டென கேட்ட முதல்வர்? திகைத்த சசிகலாவின் "ரைட் ஹேண்ட்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவிற்கு கிட்டத்தட்ட கடந்த 5 வருடமாக மிகவும் நெருக்கமாக இருந்த முக்கிய நிர்வாகி ஒருவருடன் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் நேரில் பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் அந்த மூத்த தலைவர். பெயருக்கு முன்பாக ஒரு நகரத்தின் பெயரை அடைமொழியாக கொண்டவர். கட்சிக்குள் ஜெயலலிதா மறைவிற்கு பின் மோதல் ஏற்பட்டதில் இருந்தே சசிகலாவின் தீவிர ஆதரவாளராக அவர் வலம் வந்தார். இருப்பினும் அதிமுகவிலேயே நீடித்து வந்தார்.

சசிகலா சிறையில் இருந்த போது, சசிகலாவை சந்திக்க விரும்பும் தினகரன் உள்ளிட்ட சசி குடும்பத்தினர் மற்றும் சசிகலா சந்திக்க விரும்பும் அவரது குடும்பத்தினர் என யாராக இருந்தாலும் அவர்களுக்காக சிறையில் மனு போடுவது இவர்தான்.

 நெருக்கமாக இருந்தார்

நெருக்கமாக இருந்தார்

அந்த அளவிற்கு சசிகலா இவருக்கு க்ளோஸ். சசிகலாவும் இவரைத்தான் எந்த உதவியாக இருந்தாலும் அழைத்து வந்தார். ஏதேனும் தனக்கு தேவை என்றாலும் அதனை வாங்கி அனுப்புங்கள் என இவருக்குத்தான் தகவல் அனுப்புவார் சசிகலா. இவரும் உடனுக்குடன் அந்த உதவிகளை செய்து வந்தார். சசிகலாவிற்கு இவர் கிட்டத்தட்ட ரைட் ஹேண்ட் போல நிகழ்ந்து வந்தார். சசிகலாவுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்த நிலையில் இவரை இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து நீக்கினார்.

 எடப்பாடி - ஓபிஎஸ் நீக்கினர்

எடப்பாடி - ஓபிஎஸ் நீக்கினர்

அவரை அதிமுகவிலிருந்து எடப்பாடி நீக்கிய நிலையிலும் சசிகலாவின் ஆதரவில் இருந்து விலகாமல் இருந்தார் அந்த முக்கிய புள்ளி. அப்படி சசியின் தீவிர ஆதரவாளராக இருந்த அவருக்கு சமீபகாலமாக சசிகலாவின் மீது வருத்தம் தோன்றிருக்கிறதாம். காரணம், தனது ஆதரவாளர்களின் நலன் குறித்து அரசியல் ரீதியாக வலிமையான எந்த முடிவையும் எடுக்க மறுக்கிறார் என்கிற கோபம் சசிகலா மீது அவருக்கு இருப்பதுதான். சசிகலா உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று இவர் கருதுகிறாராம்.

 ஸ்டாலின் மீட்டிங்

ஸ்டாலின் மீட்டிங்

இந்த நிலையில்தாம் பிரபல பத்திரிகையாளர் ஒருவரின் இல்லத்து நிகழ்ச்சி சென்னையில் நடந்த போது அந்த நிகழ்ச்சிக்கு மு.க.ஸ்டாலின் சென்றிருக்கிறார். அதே நிகழ்ச்சிக்கு இவரும் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவரை பார்த்த ஸ்டாலின், ''என்னங்க ? எப்படி இருக்கீங்க? உங்களோட டி.வி. டிபேட்டெல்லாம் பார்க்கிறேன். சூப்பரா ஆர்கியூ பன்றீங்க'' என்று பாராட்டி உள்ளார். இதை கேட்டு அவர் வியந்து போய் இருக்கிறாராம். இதற்கு பின்பு நடந்ததுதான் செம ட்விஸ்ட்.

 எங்க பக்கம் வாங்களேன்

எங்க பக்கம் வாங்களேன்

அவரிடம் பேசிக்கொண்டு இருந்த முதல்வர்.. அப்படியே வந்துடுங்களேன் நம்ம பக்கம்.. சசிகலாதான் முடிவு எதுவும் எடுக்கவில்லையே என்றும் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதை கேட்டு அந்த நிர்வாகி ஒரு நிமிடம் திகைத்து போய் இருக்கிறாராம். அப்படி அவர் சொன்னதில் ஏக குஷியாகி விட்டாராம் அந்த சசிகலா ஆதரவாளர்.

Recommended Video

    21-03-2022 - தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் - விவாதம்.
     என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில், தனது நலன் விரும்பிகள், நண்பர்கள் பலரிடமும், திமுகவுக்கு போகலாமா என்று கருத்து கேட்டுக்கொண்டிருக்கிறார் அந்த நிர்வாகி. அவரிடம் சிலர்.. போங்க.. போங்க.. அதிமுகவில் இருந்து போனவங்களுக்கு அங்கு நல்ல மரியாதை தருகிறார்கள் என்று கூறி உள்ளனராம். அனேகமாக திமுகவுக்கு தாவுவதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சசிகலா தரப்பினர். இந்த தகவல் தற்போது சசிகலாவிடம் சொல்லப்பட்டிருக்கிறதாம்.. இதனால் இவரை சமாதானம் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+