ஒரே டிக்கெட்.. சென்னை மாநகர பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்.. முதல்வர் ஸ்டாலின் திட்டம்
சென்னை: சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் பயணிக்கும் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் நடைமுறை குறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.
சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மாநகர அரசு பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. தினமும் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக சென்னை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
சென்னையில் தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும், கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ-புறநகர் ரயில் பயன்
சென்னையின் அனைத்து இடங்களுக்கும் மாநகர பஸ்கள் இயங்கி வரும் வேளையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க நகருக்குள் மக்கள் மெட்ரோ ரயில் பொதுமக்கள் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு எளிமையாக செல்ல மக்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அதோடு சென்னை மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல இடங்களுக்கு சென்னை மாநகர பஸ்கள் இயங்கி வருகின்றன. இதனால் இந்த 3 சேவைகளையும் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தற்போதைய நிலையில் மாநகர பஸ்கள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒருவர் பயணிக்க வேண்டும் என்றால் அவர்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் தான் இவை அனைத்துகம் ஒரே வகையான பயணச்சீட்டை பயன்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஒருங்கிணைந்த குழும கூட்டம்
அதன்படி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தனத்தில் துவங்கி நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த 2020ம் ஆண்டில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்ட நிலையில் அதன்பிறகு கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் அந்த குழு தலைவராக தற்போது முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஒரே பயணச்சீட்டு முறை
இந்த கூட்டத்தில் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள், வசதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைப்பது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் சென்னையில் ஒரே பயணச்சீட்டு முறை நடைமுறைக்கு வரும். அதன்படி ஒருவர் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே பயணச்சீட்டு மூலம் பயணிக்க முடியும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

30 ஆண்டை கருத்தில் கொண்டு..
மேலும் சென்னை மாநகராட்சியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாகவும், அதனை தடுக்கும் வகையில் புதிய போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முற்றிலும் பாதுகாப்பான சாலை அமைத்து கொடுப்பது பற்றியும் கருத்துகள் பரிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் சென்னையின் அடுத்த 30 ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிப்புகளாக வெளியாக வாய்ப்புள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications