1,50,000 உயிர்களைக் காப்பாற்றிய முதல்வர் ஸ்டாலின் - மாஸ்டர் ப்ளான் உருவானது எப்படி ?
சென்னை: 'இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதம் இத்திட்டத்தினை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்காக முதல் 48 மணிநேர உயிர்காக்கும் உயர் சிகிச்சைகளைத் தமிழ்நாடு அரசே இலவசமாக வழங்கும் இத்திட்டம் மூலம் 812 விதமான மருத்துவச் சிகிச்சைகளை அளிக்கத் தமிழ்நாடு அரசு முன்வந்தது.

இதற்காக மொத்தம் 609 மருத்துவமனைகளா?
இதன் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர், பிறமாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவரும் பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசுத் தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டன.
அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, ஆய்வு செய்து விபத்துகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளின் மூலம் இறப்பவர்கள் சுமார் 23.9% இருப்பதாகவும் அதனைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல், ஒருங்கிணைந்த அமைப்பு சாலைப் பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தப் பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய சாலைப் பாதுகாப்பு ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் சாலைப் பாதுகாப்பு, மக்கள் இயக்கமாக மாற பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தல் எனப் பல கோணங்களில் இந்த இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது.

இன்னுயிர் காப்போம் மிகப் பெரிய சாதனை:
இந்நிலையில் இத்திட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்ற மகிழ்வான செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம்" என்று பெருமிதத்துடன் ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் அவர், "Golden Hours-இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென 'இன்னுயிர் காப்போம் திட்டம்' தொடங்கினோம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார். அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல் மருவத்தூரில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தினை தொடங்கிவைத்தார்.
எனவே திமுக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இந்த வெற்றி குறித்து, "Golden Hours- இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென 'இன்னுயிர் காப்போம் திட்டம்' தொடங்கினோம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார். அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆண்டு தொடக்கவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, "விபத்து நேரத்தில் உயிர்போவதற்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது, நேரமும் காலமும்தான். விபத்து நடந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துவிட்டால், அந்த உயிரைக் காப்பாற்றிவிடலாம்.

பாகுபாடு இல்லாமல் மருத்துவம் தேவை:
காலதாமதம் ஏற்படும்போது அந்த உயிரிழப்பு ஏற்படுகிறது. அந்த நேரத்தைத்தான் மருத்துவர்கள் 'Golden Hours' என்று சொல்கிறார்கள். விலை மதிக்க முடியாத அந்தத் தருணத்தில் எடுக்கக் கூடிய முடிவுகள், துரிதமான செயல்பாடுகள்தான் மனித உயிர்களைக் காப்பாற்றுகிறது.
விபத்தை எதிர்கொள்பவர் அடையும் மாபெரும் துன்பம் என்பதும் இந்த நேரம்தான். அப்படியான தருணத்தில் ஒருவர் சேர்க்கப்படும் இடம் தனியார் மருத்துவமனையா? அரசு மருத்துவமனையா என்ற பாகுபாடு இல்லாமல் இருந்திட வேண்டும். இந்தப் பாகுபாடு முழுமையாகத் தவிர்க்கப்பட்ட வேண்டும் என நாங்கள் நினைத்தோம்.
அதனால்தான், இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகச் சாலை விபத்தில் பாதிப்பாக்கப்பட்டவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்" என்று அறிவித்திருந்தார்.
இப்படி விபத்தில் சிக்கியவரைக் கொண்டுவந்து மருத்துவமனையில் அனுமதிப்பவருக்கு ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசு விபத்தில் சிக்கியவரின் சிகிச்சைக்காக ரூ 1 லட்சம் வரை வழங்கும் என்றும் கூறியிருந்தது.

வேறு எந்த முதல்வராவது இதைச் செய்துள்ளாரா?
இத்திட்டத்தின் சிறப்பு குறித்துப் பேசிய ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, "விபத்து ஆகிவிடுகிறது. ரத்தம் ஊற்றுகிறது. நினைவில்லை. தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்கிறோம். வசதி இருப்பவன் பிழைப்பான், வசதி இல்லாதவன் இறப்பான்.
ஆனால் எங்கள் முதலமைச்சர் ஸ்டாலின்தான் சொன்னார். அது எந்த மருத்துவமனையாக இருந்தாலும் பரவாயில்லை. அது அப்போலோ மருத்துவமனையாக இருந்தாலும் பரவாயில்லை. அருகில் உள்ள எவ்வளவு பெரிய தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் சரி, விபத்தில் சிக்கியவரைக் கொண்டு போய் சேர். அரசே அதற்கு உரிய மருத்துவச் செலவை ஏற்கும் என்றார்.
வேறு எந்த முதல்வராவது இதைச் செய்துள்ளாரா? எங்கள் முதல்வர்தான் செய்தார். நாங்கள் இதைத் தேர்தல் அறிக்கையில் சொன்னோமா? இல்லையே? நாங்கள் சொன்னதையும் செய்தோம். சொல்லாததையும் செய்துள்ளோம்" என்கிறார்
இத்திடத்தின் பின்புலமாக இருந்தவர் டாக்டர். டாரேஸ் அகமது ஐஏஎஸ், "இந்தியாவிலேயே விபத்து மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு இருக்கிறது. ஆகவே, சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான வேலைகளை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். அதன் மூலம் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என அரசுத் திட்டமிட்டது.

இந்த இன்னுயிர் காப்போம் எப்படி உருவானது?
அதற்காக அரசாங்கத்தின் பலதுறைசார்ந்த நிபுணர்களை அழைத்து ஐஐடியில் ஒரு ஆலோசனையை மேற்கொண்டோம். அதை முதல்வர் ஸ்டாலின் பார்வைக்குக் கொண்டுசென்றோம். அவர் தீர ஆலோசித்தார். 'ஒருவிபத்து அவரை மட்டும் பாதிக்கவில்லை. அவரை நம்பி உள்ள குடும்பத்தினரையும் பாதிக்கிறது.
எனவே ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டி மருத்துவமனைக்குச் செல்லும்போது அங்கு உயிரை விடப் பணம் பிரதானமாக மாறிவிடுகிறது. உயிரைக் காப்பாற்றுவது என்பது பின் தங்கிவிடுகிறது. நாம் அதை மாற்ற வேண்டும். உயிரைக் காப்பாற்றுவதே முதல் வேலை. பணம் என்பது இரண்டாம் பட்சம்தான். நாம் 48 மணிநேரம் விபத்துக்குள்ளானவரைக் காப்பாற்றிவிட்டால், அவரை பின் குடும்பம் காப்பாற்றிவிடும். அதற்கு நாம் அவகாசம் ஏற்படுத்தித் தரவேண்டும்' என்றார்.
அதைக் கொண்டே திட்டமிட்டோம். அதைக் கொண்டு உருவானதுதான் 'இன்னுயிர் காப்போம் திட்டம்'. இதில் ஒரு அம்சம்தான் 'நம்மைக் காக்கும் 48'. மேலும் சீரான சாலைகள் திட்டம், இன்னுயிர் காப்போம் உதவிசெய் திட்டம் போன்ற பல அம்சங்களை இத்திட்டம் உள்ளடக்கி இருக்கிறதுஅதற்காக அரசாங்கத்தின் பலதுறைசார்ந்த நிபுணர்களை அழைத்து ஐஐடியில் ஒரு ஆலோசனையை மேற்கொண்டோம். அதை முதல்வர் ஸ்டாலின் பார்வைக்குக் கொண்டுசென்றோம். அவர் தீர ஆலோசித்தார். 'ஒருவிபத்து அவரை மட்டும் பாதிக்கவில்லை. அவரை நம்பி உள்ள குடும்பத்தினரையும் பாதிக்கிறது.
எனவே ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டி மருத்துவமனைக்குச் செல்லும்போது அங்கு உயிரை விடப் பணம் பிரதானமாக மாறிவிடுகிறது. உயிரைக் காப்பாற்றுவது என்பது பின் தங்கிவிடுகிறது. நாம் அதை மாற்ற வேண்டும். உயிரைக் காப்பாற்றுவதே முதல் வேலை. பணம் என்பது இரண்டாம் பட்சம்தான். நாம் 48 மணிநேரம் விபத்துக்குள்ளானவரைக் காப்பாற்றிவிட்டால், அவரை பின் குடும்பம் காப்பாற்றிவிடும். அதற்கு நாம் அவகாசம் ஏற்படுத்தித் தரவேண்டும்' என்றார்.
அதைக் கொண்டே திட்டமிட்டோம். அதைக் கொண்டு உருவானதுதான் 'இன்னுயிர் காப்போம் திட்டம்'. இதில் ஒரு அம்சம்தான் 'நம்மைக் காக்கும் 48'. மேலும் சீரான சாலைகள் திட்டம், இன்னுயிர் காப்போம் உதவிசெய் திட்டம் போன்ற பல அம்சங்களை இத்திட்டம் உள்ளடக்கி இருக்கிறது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications