என் மனைவி துர்கா எந்த கோயிலுக்கு போறாருனு பார்க்குறதே பாஜகவின் வேலை! அது அவர் இஷ்டம்! ஸ்டாலின் நறுக்
சென்னை: என் மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது அவருடைய தனிப்பட்ட விருப்பம் , அதை நான் தடுக்க விரும்பவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் பாராட்டுகளை போல விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன். விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன்தான் அதிகம் இருக்கும்.

எனவே அதை விரும்புகிறேன். திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது. கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது அதிமுக. பாஜகவும் அதிமுகவும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.
மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்பதால் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். போலியான பெருமைகள் தேவையில்லை. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும். ஆரியத்திற்கு தான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல. நமது கருத்துகள் தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும்.
நீட் தேர்வு ரத்து இயக்கத்திலும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள். நெகட்டிவ் பிரச்சாரம் மூலம் பிறரை வீழ்த்தக் கூடாது. பாசிட்டிவ் பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை பார்ப்பதுதான் பாஜகவினரின் ஒரே வேலையாக உள்ளது. அங்கே சென்று போட்டோ எடுத்துவிட்டு, இதோ பார்த்தீர்களா கோயிலுக்கு போகிறார் என பரப்புவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கும்தான் என் மனைவி செல்கிறார். அது அவருடைய விருப்பம். அதை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. திமுக ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்பட்டதாக தகவல்கள் பரவுகின்றன. வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளம் மூலம் வதந்தி பரவுகிறது. 1000 கோயிலிகளுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். கோயில் சொத்துகளையும் மீட்டெடுத்துள்ளோம்.
அதிமுகவும் பாஜகவும் வேறு வேறு அல்ல. அவை இரண்டுமே கொள்கை இல்லாத கட்சி. மருந்து கண்டுபிடித்துவிட்டால் மட்டும் நோய்க் கிருமிகள் ஒழிந்துவிடுமா, தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கும்சான் திராவிட இயக்கம். யாருடைய தலையையும் எடுக்க பிறந்தது அல்ல. கோயில்கள் சமூகவிரோதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications