இன்று பிறந்தநாள்! விபி சிங்கை புகழ்ந்த ஸ்டாலின்! யார் இந்த மாஜி பிரதமர்? வரலாறை பாருங்க-சிலிர்க்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியில் நேர்மையாக செயல்பட்ட நிலையில் பிரச்சனையை சந்தித்த நிலையில் புதிய கட்சியை தொடங்கி மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு முறையை செயல்பாட்டுக்கு தந்து சமூக நீதிக்காக ஆட்சியை இழந்த மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கை நினைவுக்கூர்ந்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 7 வது பிரதமராக இருந்தவர் விபி சிங். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவ இவர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். இதற்கிடைியே தான் விபி சிங்கிற்கு அரசியல் ஆர்வம் வந்தது.

இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட தொடங்கினார். முதலில் உத்தர பிரதேச மாநில அரசியலில் கவனம் செலுத்தி எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு தேசிய அரசியலில் நுழைந்தார். 1974 ல் முதல் முறையாக எம்பினார். 1974 ல் பிரதமர் இந்திரா காந்தி அமைச்சரவையில் மத்திய வர்த்தக துறை இணை அமைச்சராக செயல்பட்டார்.

மேலும் தனது செயல்பாட்டால் அவர் காங்கிரஸ் கட்சியில் மிகவும் புகழ்பெற்ற நபராக மாறினார். அதன்பிறகு மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பிய விபி சிங் 1980ல் உத்தர பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது உத்தர பிரதேசத்தின் தென்மேற்கு மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டுகள் அதிகரித்த இதையடுத்து குற்றங்களுக்கு பொறுப்பேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து பரபரப்பை கிளப்பினார்.ஆனால் அது நடக்கவில்லை.

இருப்பினும் அவரது துணிவை அனைவரும் பராட்டினர். அதன்பிறகு மீண்டும் தேசிய அரசியலுக்கு சென்ற விபி சிங் மத்திய அமைச்சராக நிதி மற்றும் பாதுகாப்பு துறையை நிர்வகித்தார். இவர் நிதி அமைச்சராக இருந்தபோது அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டது. மேலும் வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிலதிபர் திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்கள் மீதும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காங்கிரஸ் கட்சி பாதுகாப்பு துறை அமைச்சராக மாற்றியது. அங்கும் போர்ப்ஸ் ஊழல் உள்ளிட்டவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

இது காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் அவரது செயல்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர், எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கி மீண்டும் எம்பினார்.

பிறகு அவரது கட்சி உள்பட சில கட்சிகள் இணைந்து ஜனதா கட்சியை தொடங்கின. அதன் தலைவராக விபி சிங் இருந்தார். 1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்த நிலையில் பல கட்சிகளின் ஆதரவுடன் விபி சிங் பிரதமரானார். இவர் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கம் காட்டி வந்தார்.

அப்போது தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகையாகவும், சாதகமாகவும் இருக்கும் என்பதில் அதில் விபி சிங் உறுதியாக இருந்து நிறைவேற்றினார்.

இதையடுத்து அவருக்கு வழங்கிய ஆதரவை பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாபஸ் பெற்றதால் அவரது ஆட்சி ஓராண்டுக்குள் கவிழ்ந்தது. இருப்பினும் மண்டல் கமிஷன் நாயகனாக விபி சிங் பெயர் பெற்றார். அதன்பிறகு கடந்த 2008 ல் விபி சிங் காலமானர். ரத்த புற்றுநோய் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில் விபி சிங்கின் உயிர் பிரிந்தது.

CM stalin says birthday wishes to VP Singh, Who is this EX Prime Minister of India

இந்நிலையில் தான் இன்று முன்னாள் பிரதமர் விபி சிங்கின் பிறந்த நாளாகும். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் விபி சிங்கை நினைவுக்கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛முன்னாள் பிரதமர் விபிசிங் பிறந்தநாளை முன்னிட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த புரட்சிகர தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். விபி சிங் சமூக நீதிக்காக அச்சமின்றி போராடினார்.

CM stalin says birthday wishes to VP Singh, Who is this EX Prime Minister of India

இடஒதுக்கீடு நமது உரிமை என்பதை வலியுறுத்த அனைவரையும் தைரியப்படுத்தினார். கருணாநிதியுடன் சேர்ந்தே இருந்தார். இருவரும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதை பகிர்ந்து கொண்டனர். அவரது எண்ணங்கள் ஒளிமயமான அதேநேரத்தில் சமமான எதிர்காலத்தை நோக்கி நம்மை வழிநடத்தட்டும்'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+