Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் இருந்தாலும் அரசையும், கட்சியையும் கவனிப்பேன்.. மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு 17 நாட்கள் தங்கி இருந்து முதலீடுகளை ஈர்ப்பதோடு, முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ள இருக்கிறார்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள '40/40-தென்திசையின் தீர்ப்பு' என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டுள்ளார்.

mk stalin dmk district secretaries meeting dmk

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் இருக்கும். மக்களுக்கு பல நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம். அதை வாக்குகளாக மாற்ற நம்முடைய களப்பணி என்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுகவை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே நம்முடைய இலக்கு. அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கவனித்துக் கொண்டே தான் இருப்பேன். திமுகவை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், திமுக கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்களின் பதவிப் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைளை உடனடியாக எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்றே கால் ஆண்டுகளில் துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்று அங்கே தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. மத்திய வெளியுறவு அமைச்சகம் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் பயணத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்டாலின் இந்த அமெரிக்க பயணத்தின் போது சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்பாக பார்ச்சூன் 500 பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். முதல்வரின் இந்த பயணத்தில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் பங்கேற்று பேச உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரி்க்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்ப உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் 17 நாள் அமெரிக்கா பயணம் மெற்கொள்வதால், உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், இப்போதைக்கு அந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுக்கவில்லை. அமெரிக்கா சென்றாலும், கட்சியையும் ஆட்சியையும் நானே கவனித்துக் கொண்டிருப்பேன் எனக் கூறி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+