Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நீங்கள் நலமா?”.. புதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! மார்ச் 6 முதல் தொடக்கம்.. என்ன பிளான்?

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: "நீங்கள் நலமா" என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 'நீங்கள் நலமா' திட்டம் என்பது என்ன?

முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மயிலாடுதுறைக்குப் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலினை திமுகவினர் வழியனுப்பி வைத்தனர். நேற்று இரவு 8.45 மணியளவில் சீர்காழிக்கு முதல்வர் சென்றார். அங்கு அவருக்கு அதிகாரிகள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

CM Stalin says that Neengal Nalama Scheme will be launched on March 6

நேற்று இரவு துர்கா ஸ்டாலின் பிறந்த ஊரான திருவெண்காட்டில் தங்கிய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருவெண்காட்டில் இருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஏராளமான மக்கள் நல திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இந்த நிலையில், புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

CM Stalin says that Neengal Nalama Scheme will be launched on March 6

நீங்கள் நலமா திட்டம்: மேலும், பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்வில் பேசும்போது புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "நீங்கள் நலமா?" என்ற புதிய திட்டத்தை வரும் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறேன் என அறிவித்தார்.

அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என உறுதி செய்வதற்காக "நீங்கள் நலமா?" திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளை கேட்டறிவார்கள். முதலமைச்சராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் பேசிய அவர், ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். மக்கள் தொண்டு ஒன்றுதான் நம் ஆட்சியின் நோக்கம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும், 'இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒரு டெல்டா காரன்' என்ற உணர்வோடு இந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளேன் என்றார்.

புதிய மாவட்டத்தை அறிவிப்பது பெரிதல்ல: மேலும், இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மண் வளமும், நெல் வளமும் மிகுந்த மாவட்டம் டெல்டா. காவிரி பாசனத்தால் வேளாண்மை செழிப்போடு இருக்கும் மாவட்டம் மயிலாடுதுறை. புதிய மாவட்டங்கள் அறிவிப்பது பெரிதல்ல, உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்குள் ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளோம். மாவட்டங்களுக்கான உட்கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது.

2 ஆண்டுகளில் 'நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றனர். அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றும் அரசு திமுக அரசு. அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்யும் அரசு திராவிட மாடல் அரசு.

திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் 2 நாட்கள் முன் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருவோணம் புதிய தாலுகா இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திருவோணம் வட்டம் உருவாக்கப்படும் என்று 2023-ல் சட்டப்பேரவையில் அறிவித்ததை செயல்படுத்தியுள்ளோம்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு: மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக செயல்படுகிறது திராவிட மாடல் ஆட்சி. மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீன்இறங்குதளம் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்படும். முத்துப்பேட்டையில் ரூ.10 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.

திருவாரூரில் ரூ.2.5 கோடியில் உலர்மின் நிலையம் அமைக்கப்படும். மயிலாடுதுறையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுக்க ரூ.44 கோடி மதிப்பில் கடைமடை நீர் ஒழுங்கிகள் அமைக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+