எரிச்சலூட்டும்.. மிதமிஞ்சிய வார்த்தைகளை கூறினீர்கள்! முதல்வருக்கு ஆளுநர் ரவி கடிதம்.. உள்ளே ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எரிச்சலூட்டும், மிதமிஞ்சிய வார்த்தைகளை கூறியதாக ஆளுநர் ஆர். என் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர். என் ரவி நேற்று கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தான் எடுத்த நடவடிக்கைக்கான காரணங்களை விளக்கி இருந்தார். அதில், அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்.

 CM Stalin sent an inflammatory letter with intemperate words saying Governor RN Ravi on Senthil Balaji

அவர் அமைச்சராக தொடர்ந்தால் விசாரணையை தடுப்பார். கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு உதாரணம். ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களும் பறிக்கப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் ஆரோக்கியமற்ற முறையில் பாரபட்சமாக செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

நான் அவரை நீக்கும்படி ஆலோசனை சொன்னேன். ஆனால் என்னுடைய ஆலோசனையை ஏற்காமல் எரிச்சலூட்டும் வார்த்தைகளை கொண்ட கடிதத்தை எழுதி நான் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக மிதமிஞ்சிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனங்களை வைத்து இருந்தார். இதனால் நான் சட்ட 154, 163 & 164 பிரிவுகள் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குகிறேன், என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு உள்ளார்.

ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

 CM Stalin sent an inflammatory letter with intemperate words saying Governor RN Ravi on Senthil Balaji

இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய இரண்டாவது கடிதத்தில் அவர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்த கடிதம் பற்றி அதிகாரபூர்வ செய்தி குறிப்பை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை.

 CM Stalin sent an inflammatory letter with intemperate words saying Governor RN Ravi on Senthil Balaji

செந்தில் பாலாஜியை நீக்கிய போது வெளியிட்ட செய்தி குறிப்பை போல.. அவரின் நீக்கத்தை திரும்ப பெற்ற போது ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பை வெளியிடவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் நடவடிக்கையை திரும்ப பெறுவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்து இருந்த நிலையில் அது தொடர்பான கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த இரண்டாவது கடிதம் ஒரு பக்கம் மட்டுமே உள்ள சின்ன கடிதம் ஆகும். அந்த கடிதத்தில், இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும் என்று மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அட்டர்னி ஜெனரலை அணுகி கருத்து கேட்க உள்ளேன். இதற்கிடையில், அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு, என்னிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அமித் ஷாவின் அறிவுரையால் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ரவி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+