வடக்கில் ‘ஸ்டெப்’ வைங்க.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமா.. “இதைவிட வேறென்ன வேணும்?” ஒரே குஷி!
முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன், பொதுக்கூட்ட மேடையில் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும், பாஜகவை வீழ்த்துவதற்காக ஜனநாயக சக்திகளைச் சந்தித்து பேச வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியை அமைக்கும் திட்டங்களோடு காய்நகர்த்தி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதற்காக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், சனாதன சக்தியை வீழ்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேராத கட்சிகள்
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக இணைய வேண்டும் என்பது திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் கருத்தாக இருக்கிறது. விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இதனையே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தேசிய அளவில் இந்த கருத்தை பல தலைவர்கள் ஏற்காமல் இருந்து வருகின்றனர். பாஜகவை எதிர்த்தாலும் கூட, காங்கிரஸ் கூட்டணியில் சேராமல் தனித்து நிற்பதால், அக்கட்சிகள் பாஜகவுக்கு சாதகமான விளைவையே தேர்தல் அரசியல் களத்தில் ஏற்படுத்துகின்றன என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் மெசேஜ்
இந்நிலையில் தான், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஒரு க்ளீயரான மெசேஜை தனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மூலம் எடுத்துரைத்தார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல். பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத் தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும்.

திமுக கூட்டணி கட்சிகள்
அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டுக் கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. இந்தக் கருத்தை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் கவனம் பெற்றது. திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சை வரவேற்றன.

தமிழ்நாட்டில் தொடங்கி விட்டனர்
இந்நிலையில், நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200வது நிறைவுவிழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, "நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ளது. இப்போதே பாஜகவினர் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டில் தொடங்கி விட்டார்கள். பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் வதந்தி பரப்பினார்கள். எங்கோ நடந்த காட்சியை பீகார் தொழிலாளர்கள் தாக்குதல் காட்சி என்று கூறி பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இதைவிட அறைகூவல் வேண்டுமா
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி கலந்து கொண்டார். எங்கே இவர்கள் ஒன்றிணைந்து விடவார்களோ என்று நினைக்கிறார்கள். நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சனாதன சக்திகளை வீழ்த்தி விடுவார்களோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. சென்னையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரசுடன் நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் சனாதனத்தை வீழ்த்த முடியும். மூன்றாவது அணி அர்த்தமில்லாதது, அது கரை சேராது என பேசினார். இதை விட வேறு என்ன பிரகடனம், அறைகூவல் வேண்டும்?

பாஜகவுக்கு சிவப்புக் கம்பளம்
குமரி மாவட்டத்தை காலூன்றும் இடமாக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கைப்பற்றி விடலாம் என நினைக்கிறது பாஜக. இதற்கு அதிமுக தோளில் ஏறி சவாரி செய்கிறார்கள். அதிமுகவும் அதற்கு இடம் கொடுக்கிறது. சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. மோடியா, லேடியா என்று சவால் விட்ட ஜெயலலிதாவை தன்னுடைய தலைவியாக ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கும்பலின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். தமிழினத்துக்கு மாபெரும் துரோகம் விளைவிக்கிறார். சனாதன சக்திகள் இங்கே வலிமைப்படுவதற்கு வழி வகுத்துக் கொடுக்கிறார். இது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். குறிப்பாக அதிமுக தொண்டர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

பெரிய துரோகம்
இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்கிறார். மாபெரும் ஆபத்தான சக்தி தமிழகத்தில் காலூன்ற அதிமுக இடம் கொடுக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் நாள்தோறும் அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். முதலமைச்சருக்கே சவால் விடுகிறார். தொட்டுப் பார் என்கிறார். எவ்வளவு ஆணவம்? அண்ணாமலைக்கு முதிர்ச்சி, பக்குவம் இல்லை. இப்படியெல்லாம் பேசி பதற்றத்தை ஏற்படுத்துவது அவர்களின் செயல் தந்திரங்களில் ஒன்று.

வட மாநில பயணம் மேற்கொள்ள வேண்டும்
திமுக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காக இப்படி செயல்படுகிறார்கள். அதிமுக அதற்கு இடம் கொடுத்து விலகி நிற்கிறது. திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை. 2024-ல் பாஜகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. எனவே சனாதன சக்தியை வீழ்த்த, ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட மாநில பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக சக்திகளை எல்லாம் சந்தித்து பேச வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள்












Click it and Unblock the Notifications