சட்டம் ஒழுங்கு பிரச்சினை.. குற்றமே நடக்கக்கூடாது.. ஓராண்டு கவனம்.. சாட்டை சுழற்றும் ஸ்டாலின்
சென்னை: அடுத்து வரும் ஓராண்டு காலம் மிகவும் முக்கியமானது. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கண்டறிந்த உடன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருவதாகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்து உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருக்கும் 10 வது தளத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மண்டல ஐஜிக்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். அதிகாரிகளை பொறுத்தவரை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அடுத்து வரும் ஓராண்டு காலம் மிகவும் முக்கியமானது. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து கண்டறிந்த உடன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம். சட்டம்-ஒழுங்கு விவகாரத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கடந்த 6 மாத காலத்தில் காவல்துறை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. அடுத்த ஓராண்டு காலத்துக்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காவல்நிலைய மரணங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை விசாரிக்கும் போதும் அதிகம் துன்புறுத்தக்கூடாது. கள்ளச்சாராய விற்பனை, போதை பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். குற்றங்கள் குறைந்திருக்கிறது என்று புள்ளி விபரம் சொல்வதை விட குற்றமே நடைபெறவில்லை என்று சொல்ல வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications