தூக்கம் வராமலிருக்க அமைச்சர் நாசர் மாத்திரை சாப்பிடுவார்! ஸ்டாலின் பகிர்ந்த ருசிகரத் தகவல்!
சென்னை: எல்லோரும் தூக்கம் வர வேண்டும் என்பதற்காக மாத்திரை சாப்பிட்டால், அமைச்சர் நாசர் மட்டும் தூக்கம் வரக்கூடாது என்பதற்காக மாத்திரை சாப்பிடுவார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாசர் பேத்தி திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்த அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துகொண்ட ருசிகர தகவல் வருமாறு;

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்
இன்றைக்கு நாசர் அமைச்சராக இருக்கிறார் என்றால். ஏதோ சாதாரணமாக இந்தப் பொறுப்பு அவருக்கு கிடைத்துவிடவில்லை. நான் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். வாரத்திற்கு எப்படியும் நான்கு, ஐந்து நாட்கள் தமிழ்நாட்டில் என்னுடைய சுற்றுப்பயணம் இருந்து கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளுக்குத் தான் அதிகமாக என்னுடைய பயணத்தை நான் நடத்துவேன்.

நாசர் கூடவே வருவார்
அப்படி போகிற இடங்களில் பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமல்ல, கொடியேற்றுகிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவது உண்டு. அப்படிப்பட்ட நிலையில் நான் அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செல்கிறபோது, தமிழகத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறபோது, எனக்குத் துணைக்கு ஒரு மூன்று பேர் வருவார்கள், நாசர் வருவார், அடுத்தது பல்லாவரம் சிங்காரம் வருவார், அதேபோல் நாகையைச் சார்ந்த அசோகன் ஆகிய மூன்று பேர்தான் இணைபிரியாமல் எப்போதும் என்னுடைய சுற்றுப்பயணத்தில் வருவார்கள்.

நாசர் தூங்கி வழிவார்
ஆனால் துணைக்கு வருவார்களே தவிர, அதிகமாக அந்த வேனில் தூங்கிக்கொண்டு வந்தது யார் என்று கேட்டீர்களானால், நாசர்தான். இதை எதற்காக நான் சொல்கிறேனென்றால், அடிக்கடி தூங்கிக்கொண்டு வரும்போது அவரை எழுப்புவதுண்டு. எனக்கு துணைக்கு வந்தாயா? அல்லது உனக்கு நான் துணைக்கு வந்திருக்கிறேனா என்று கேட்டு நான் எழுப்புவதுண்டு. அதனால் என்ன செய்வார் என்றால், எப்போதும் தூக்கம் வருவதற்குத்தான் மாத்திரை போட்டுப் பார்த்திருக்கிறோம். உடல்நலம் சரியில்லாதவர்கள், தூக்கம் வராதவர்கள் தூக்க மாத்திரை போட்டுப் பார்த்திருக்கிறோம். ஆனால் நாசர் என்ன செய்வார் என்றால், தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரை போட்டுவிட்டு வருவார், அப்படியிருந்தும் தூங்குவார். அப்படிப்பட்ட நிலையில் அவருடன் பயணம் செய்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

பால் விலை குறைந்தது
நம்முடைய நாசர் அவர்கள் இன்றைக்குப் பால்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், பாராட்டக்கூடிய அளவிற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் வந்தவுடன் பால் விலை குறைந்துவிட்டது. அதுவே மக்களுக்கு எவ்வளவு பெரிய சாதகமான சூழல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, ஆவினின் புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டதும் இவர் அமைச்சராக இருக்கக்கூடிய நேரத்தில்தான்.
-
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications