சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அசுரன்" பட வசனத்தை சொல்லி.. ஆளுநருக்கு நன்றி சொன்ன முதல்வர்.. சிரித்தபடி பார்த்த ரவி.. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை பல்கலையின், 164வது பட்டமளிப்பு விழா தற்போது நடந்து வருகிறது. இதில், முதல்வரும், ஆளுநரும் ஒரே மேடையில் தோன்றி உள்ளனர். சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என் ரவியை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்.

அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ரவி கையெடுத்து கும்பிட்டார். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

சென்னை பல்கலை

சென்னை பல்கலை

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவியர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அடுத்தடுத்த உயர்விற்கு ஒரு அடித்தளம் இந்த பட்டம். சென்னையின் முதல் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம். இங்கு பல முன்னோடிகள், சாதனையாளர்கள் படித்துள்ளனர்.

 முன்னோடி

முன்னோடி

அவர்களை போல நீங்களும் முன்னோடியாக வேண்டும். இந்த பட்டதோடு முடிக்காமல் இன்னும் மேலும் மேலும் நீங்கள் படிக்க வேண்டும். உங்களை போன்றவர்களும், ஏழைகளும் கல்வி பெற, வேலை பெற வசதியாக பல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது. பெண்கள் இடைநிற்றலை தவிர்க்கவே மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 திட்டங்கள்

திட்டங்கள்

இலவச பஸ்பாஸ், இலவச தங்கும் விடுதி போன்ற திட்டங்களை பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் நாங்கள் வழங்கி வருகிறோம். சென்னை பல்கலை பல சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. சென்னை பல்கலையில் திராவிட இயக்க ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விதை போடப்பட்டது. அது தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

ஆய்வு கட்டுரைகளின் விவரங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு அறிவுசார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சென்னை பல்கலை கையெழுத்து போட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திருக்குறள் இங்கு விருப்ப பாடமாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். மாணவர்களை நல்வழிப்படுத்த பயன்படும். '

அசுரன் பட வசனம்

அசுரன் பட வசனம்

கல்விதான் உங்களுடைய சொத்து. அதை யாரும் உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது என்று அசுரன் பட வசனத்தை கூறிய முதல்வர் ஸ்டாலின்.. கல்வியை வளப்படுத்த அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அரசின் நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆளுநர் ரவிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் நன்றி தெரிவித்த போது அதை மகிழ்வுடன் ஆளுநர் பார்த்துக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CM Stalin thanks Governor Ravi for his efforts in the education field at Madras University Convocation. சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு நன்றி தெரிவித்தார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X