Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்பார்க்காத பதிலடி வரப்போகிறது! டாப் சட்ட வல்லுனர்களை சந்தித்த ஸ்டாலின்.. இன்றே முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி நேற்று ஆளுநர் ஆர். என் ரவி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.

பெரும் பரபரப்பிற்கு இடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .

CM Stalin to hold an important meeting amid Governor RN Ravi removing Minister Senthil Balaji from a cabinet

ஆனால் தமிழ்நாடு அரசு.. செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.

ஆனாலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

CM Stalin to hold an important meeting amid Governor RN Ravi removing Minister Senthil Balaji from a cabinet

ஆளுநரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சட்ட ரீதியாக அவரை எதிர்கொள்வோம் என்று ஆளும் திமுக அறிவித்தது. முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அறிவித்தார். இந்த நிலையில் 5 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார்.

தேசிய அளவில் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .

ஆலோசனை: இந்த நிலையில் மூத்த அமைச்சர்கள், சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆலோசனை செய்ய வருகிறார்.செந்தில் பாலாஜி - ஆளுநர் ஆர். என் ரவி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர் ரகுபதி பங்கேற்று உள்ளார்.

CM Stalin to hold an important meeting amid Governor RN Ravi removing Minister Senthil Balaji from a cabinet

இதில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சுண்முகசுந்தரம் பங்கேற்றுள்ளார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் பங்கேற்றுள்ளார். சட்ட ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் ஆளுநருக்கு எதிராக மிக பெரிய நடவடிக்கை ஒன்றை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நீதிமன்ற காவல்: சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்தன. தொடர்ந்து 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது.

அதன்பின் அமலாக்கத்துணை ரெய்டும் நடந்தது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடிப்படையில் ரெய்டுக்கு உள்ளான செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+