ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை.. நாளை எடுக்கப்படும் முக்கிய முடிவு.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய மீட்டிங்
சென்னை: 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தின் முதல் கட்ட முகாம்கள் நாளையோடு முடிய உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகை ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சாதாரணமாக எல்லோருக்கும் வழங்கிடாமல் முறையாக பயனாளிகளை கண்டுபிடித்து தேவையான நபர்களுக்கு மட்டும் நிதியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன.

அதன் முடிவில் யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும் என்ற லிஸ்ட் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு வாரம் முன்பு இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தரப்பட்டன. இந்த விண்ணப்பங்களுடன் சேர்த்து கூடுதலாக டோக்கன் ஒன்றும் வழங்கப்பட்டது.
இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் டோக்கனில் உள்ள தேதியில், முகாம் எங்கே உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் இடத்தில் சென்று டோக்கனை காட்டி பின்னர் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். இதற்காக ஆதார் கார்ட், ஆதார் கார்ட் இணைக்கப்பட்ட போன் எடுத்து செல்லப்பட வேண்டும்.
முதல் கட்டமாக வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் விண்ணப்பத்தில் சிலருக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்படாமல் விடுபட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கப்பட்ட போது விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மீண்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இதற்கான முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் 1 முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் கலைஞர் உரிமைத்தகைக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது..
1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தின் முதல் கட்ட முகாம்கள் நாளையோடு முடிய உள்ளது. ஒவ்வொரு உதவி மையத்திலும் ஒரு தன்னார்வலர் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்வார். மீதம் உள்ள 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் முகாம் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகத் தொடங்கும்.
அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள், குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தின் முதல் கட்ட முகாம்கள் நாளையோடு முடிய உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல் கட்ட கூட்டம்: குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் முதல் கட்ட முகாம் எப்படி நடந்தது என்பது, இரண்டாம் கட்ட முகாமில் என்னென்ன மாற்றங்களை செய்வே வேண்டும், என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை செய்ய உள்ளார்.
டோக்கன்: இந்த திட்டத்திற்கான டோக்கனும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இதற்கான முகாம்கள் தொடங்கி உள்ளன.இந்த டோக்கனில் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும்.
எல்லா மாவட்டங்களும் கிட்டதட்ட 500 முகாம்களை கொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் முகாம்கள் பள்ளிகளில் உள்ள மைதானங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கூட்டங்களை சமாளிக்க முடிகிறது. முகாம்களில் கழிப்பறை, குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காகவே கல்லூரி, பள்ளி வளாகங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த முகாம்களை தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் உடனடி ஆய்வு செய்து வருகின்றனர். முகாம்கள் சரியாக நடக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications