மிரட்டும் டெங்கு காய்ச்சல்.. மானாவரியாக உற்பத்தியான ஏடீஸ் கொசு.. முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

CM Stalin to hold meeting on Dengue fever

நேற்று முன் தினம் அதாவது 14 ஆம் தேதி ஒரே நாளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 18 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேவையான மருந்து மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன.

தினசரி டெங்கு பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வருகிறது. டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டெங்குவை பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கக் கூடும்.

தமிழகத்தில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, இதனால் யாருக்கெல்லாம் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். மேலும் ஏடீஸ் கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்தால் ரத்தக்கசிவு ஏற்படும். இதனால் நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவது முக்கியமானது. இதனால் ரத்த வங்கிகளில் போதுமான அளவுக்கு ரத்தம் இருப்பதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 12 ஆம் தேதி தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிப்பதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதில் டெங்குவை ஒழிப்பது குறித்தும் உயிரிழப்பை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் உயிரிழப்பு ஏற்படும் வரை காய்ச்சல் பாதிக்கப்பட்டோரை வீட்டிலேயே வைத்திருக்காமல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+