வாவ் சென்னை! கலைஞர் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?
சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார். ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் ஜிப்லைன் சாகசம், கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். தொடர்ந்து பூங்காவில் உள்ள வசதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னையில் புதிய பூங்கா: இந்த பூங்கா அமைந்துள்ள இடம், ஒரு சங்கத்திடம் இருந்து தமிழக அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலைத் துறைக்கு மாற்றப்பட்டது. சென்னை மாநகர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அந்த நிலத்தில் உலகத்தரம் வாய்ந்த பூங்கா அமைக்க முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், ரூ.45.99 கோடியில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள இந்த பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைத்தார்.
பூங்காவில் இடம்பெற்றுள்ள பொழுதுபோக்கு அம்சங்கள்: இந்த பூங்காவில், உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளம் உடைய 'ஜிப்லைன்' (கயிற்றில் தொங்கி செல்லும் சாகசம்), பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவு பாதை, 120 அடி நீளம் உடைய பனிமூட்ட பாதை, 2,600 சதுரஅடி பரப்பிலான ஆர்க்கிட் குடில், 10,000 சதுரஅடி பரப்பில் அரியவகை பூச்செடிகளால் அமைக்கப்பட்டுள்ள 16 மீட்டர் உயர கண்ணாடி மாளிகை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், வெளிநாட்டு பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்கள் இந்தப் பூங்காவில் உள்ளன.
இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது.
கட்டண விவரம்: பூங்கா நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜிப்லைன் சாகச பயணம் செல்ல பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150.
பறவையகத்தை பார்வையிட, உணவு அளிக்க பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75. மாலை நேரத்தில் இசை நீரூற்று நடனம் காண ரூ.50, கண்ணாடி மாளிகையை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40. குழந்தைகள் பங்கு பெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50, புகைப்பட கருவிகளுக்கு ரூ.100, வீடியோ கேமராக்களுக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் 3 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும்.
https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் மூலம் நுழைவு கட்டண விவரங்கள் மற்றும் நுழைவு சீட்டை பெறலாம். க்யூஆர் குறியீடு மூலமாகவும் நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications